For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்டை நாடுகளுக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தலாம்.. இதையே இப்போதான் கண்டுபிடித்த அமெரிக்கா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க சிந்தனையாளர்கள் குழு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

தாலிபன்கள் மற்றும் ஆப்கானிலுள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. இதன் காரணமாக மோசமான பொருளாதார சூழலுக்கு ஆப்கானிஸ்தான் உள்ளாக்கப்படும். பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ளாவிட்டால். அந்நாட்டுக்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கும் என்று அமெரிக்க சிந்தனையாளர்கள் குழு தரப்பு தெரிவித்துள்ளது.

US think tank says Pak more of a threat than an ally

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டேனியல் கோட்ஸ் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதை இப்போதான் கண்டுபிடித்தீர்கள் என்றால் அமெரிக்கா எப்படி சூப்பர் பவர் நாடாக இருக்க முடியும் என்ற கேள்வி மக்களிடம் எழத்தான் செய்யும். ஆனால் இப்போது பாகிஸ்தானை மிரட்டி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருப்பதுதான் இதுபோன்ற தகவல்களை வெளியிட காரணம் என தெரிகிறது.

English summary
Pakistan is still a sanctuary for the Taliban and the Haqqani network and more of a threat than an ally, a top US think tank has said, while asserting that the Trump administration should make it clear to Islamabad that it will face sanctions if it continues to support them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X