For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்காவின் மிரட்டலால் பரபரப்பு.. என்ன நடந்தது?

இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்கா எச்சரிக்கை- வீடியோ

    நியூயார்க்: இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. நிறைய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது.

    ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியாதான். இந்த நிலையில் இந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்தியா கடந்த சில வருடங்களாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு வகையாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் போர் விமானங்கள் மட்டும் இல்லாமல் விண்ணில் சென்று எதிரிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் வாங்க உள்ளது.

    பிரச்சனை எதனால்

    பிரச்சனை எதனால்

    இந்த நிலையில் இன்று ரஷ்யாவிடம் இந்தியா, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் போடப்பட உள்ளது.

    என்ன திறன்

    என்ன திறன்

    இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

    என்ன ஒப்பந்தம்

    என்ன ஒப்பந்தம்

    சிரியாவில் 2014 ரஷ்யா அத்துமீறியதை அடுத்து, அந்த நாட்டிடம் இருந்து சக்தி வாய்ந்து போர் ஏவுகணைகளை வாங்கி கூடாது என்று அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது. அதையும் மீறி வாங்கினால் அந்த நாடுகளின் மீது தானாக ஒப்பந்தத்தின் படி பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் மோடி தலைமையிலான அரசு கடந்த வருடம் ஆகஸ்டில் கையெழுத்து போட்டுள்ளது.

    தடை விதிக்கப்படும்

    தடை விதிக்கப்படும்

    இந்த நிலையில் இந்தியா மீது ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானாக பொருளாதாரா தடை விதிக்கப்படும். அமெரிக்க இன்று காலையே இதற்கான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான முடிவுகள் தெரிய வரும். இதே காரணத்திற்காக சீனா மீது அமெரிக்கா சென்ற வருடம் பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US threatens India with sanctions amidst India's treaty Russia today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X