For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதெப்படி புதினுடன் கிரிமீயா பிரதமர் இந்தியா வரலாம்?: கொந்தளிக்கும் யு.எஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரஷ்யா அதிபர் புதினுடன் கிரிமீயாவின் பிரதமரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு ரஷ்யா அதிபர் புதின் தலைமையிலான குழு வருகை தந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி- ரஷ்யா அதிபர் புதின் முன்னிலையில் டெல்லியில் 20 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.

US 'Troubled' by Reports of Crimean Leader's India Visit

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி, இந்தியா சென்றுள்ள புதின் தலைமையிலான குழுவில் கிரிமீயாவின் பிரதமர் செர்ஜி அக்ஸ்யோனோவும் இடம்பெற்றிருப்பதாக செய்திகளில் வந்துள்ளது ஆட்சேபத்துக்குரியது.

அதே நேரத்தில் இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளோம்.

மேலும் வர்த்தகம், அணுசக்தி துறை தொடர்பான ஒப்பந்தங்களில் ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இதுசரியான தருணம் அல்ல என்றார்.

உக்ரைன் நாட்டின் ஒருபகுதியாக கிரிமீயா இருந்தது. ஆனால் கிரிமீயாவோ தாங்கள் ரஷ்யாவுடன் இணைய விரும்புவதாக அறிவித்தது. இதனை ஏற்று ரஷ்யாவின் ஒரு அங்கமாக கிரீமியா இணைந்தது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

இதனாலேயே கிரீமியாவின் பிரதமரும் புதின் தலைமையிலான குழுவில் இடம்பெற்றதற்கும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

English summary
The United States is "troubled" by the reports of the 'Head of the Republic of Crimea' accompanying Russian President Vladimir Putin to India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X