For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிபோர்னியா காட்டுத் தீ... இதுவரை 24 பேர் பலி... 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Google Oneindia Tamil News

ஒரிகான்: கட்டுக்கடங்காமல் தொடர்ந்து காட்டுத் தீ பரவுவதால் ஒரிகான் பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுப் பகுதியில் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துகளில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

US Wild fire.. 24 dead, 5 lakh people to evacuate

தற்போதைய நிலையில் 100 இடங்களில் காட்டுத் தீ பரவி இருக்கிறது. கலிபோர்னியா, ஒரிகான், வாஷிங்டன் பகுதிகள் மிக மோசமாக காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. போர்ட்லாந்தின் தெற்கு பகுதியில் மொலாலா நகரில் இருந்து மட்டும் 9,000 பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒரிகான் ஆளுநர் கடே ப்ரவுன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 5 லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது என்றார். தற்போது காற்றின் வேகம் குறைந்து மழைக்கான வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காட்டுத் தீ கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    America, Russiaவில் ஒரே நாளில் தீ! எப்படி நடந்தது?

    இத்தீவிபத்தில் சிக்கியவர்கள் கூறுகையில், மெக்சிகோவில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் 4 குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினோம். இப்போது எல்லாமும் போய்விட்டது. உயிருடன் நாங்கள் இருக்கிறோம்.. இதுமட்டும்தான் மிச்சமாக உள்ளது என்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் இந்த தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருக்கிறது. கலிபோர்னியாவில் மட்டும் 3,9000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன.

    English summary
    At least 24 People killed since last month, in the US California's Wild Fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X