"தொட முடியாது".. தைவானுக்கு நாங்க இருக்கோம்.. அதிரடி காட்டிய பிடன்.. வரிந்துகட்டி வந்த சீனா..!
டோக்கியோ: தைவானுக்குள் சீனா ஊடுருவினால், அமெரிக்கா நிச்சயம் அங்கே ராணுவ ரீதியாக தலையிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, அதை தன்னுடைய நாட்டுடன் இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...
"தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைப்போம்" என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்திய எல்லையில்.. சீனா கட்டியது கிராமம் இல்லை, ராணுவ கேம்ப்பாம்! பகீர் தகவல்.. ஊடுருவல் முயற்சியா?

ரஷ்யா
அதனால், உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ளதைபோல, தைவான் மீது சீனாவும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவின் 1979, தைவான் உறவுகள் சட்டத்தின்படி தைவானை பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாக தலையிட வேண்டியதில்லை. ஆனால், தைவான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆயுத உதவிகளை வேண்டுமானால் செய்யலாம் என்று நம்பப்படுகிறது.

தைவான்
இந்நிலையில், ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்துள்ளார் ஜோ பிடன்.. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சீனா-தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விவரித்தார்.

வலிமை
அவர் சொல்லும்போது, "உக்ரைனில் ரஷ்யா ஊடுருவியதற்கு பிறகு, தைவானை பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சுமையாகவும், வலிமையாகவும் மாறி உள்ளது.. தைவானில் சீனா ஊடுருவினால் தைவானை பாதுகாக்க ராணுவரீதியாக அமெரிக்கா நிச்சயம் தலையிடும்.. காரணம் அது எங்களது கடமை.. ஒரு வேளை, தன்னுடைய ராணுவ பலத்தை பயன்படுத்தி சீனா, தைவானை கைப்பற்ற நினைத்தால் அமெரிக்காவும் தன்னுடைய ராணுவத்தை தைவானுக்கு ஆதரவாக நிறுத்தும்.

படைபலம்
அதனால், தைவானுக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த சீனா எடுக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காது.. அது ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்து, உக்ரைனில் நடப்பதை போல இன்னொரு நடவடிக்கையாகத்தான் இருக்கும்.. அதனால், இதுபோன்ற செயல்களில் சீனா செயல்படாது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக உலக நாடுகளும் சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும்" என்றார்.

பதிலடி
ஜோபிடனின் இந்த பேச்சுக்கு சீனா பதிலடி தந்துள்ளது... இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் சொல்லும்போது, "தைவான் விவகாரம் என்பது சீனாவின் உள்நாட்டு பிரச்சனை.. சீனாவை சேர்ந்ததுதான் தைவான் என்ற பகுதி.. தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவை... இரண்டையும் ஒப்பிடுவது சரியில்லை.. சீனாவின் இறையாண்மை சார்ந்த விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது... சீனாவின் வலிமை பற்றியும் திறனை பற்றியும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று காட்டமாகவே பதிலடி தந்துள்ளார்.

சுயஆட்சி
ஆக, ஒருபக்கம் தைவான் தன்னுடைய பகுதிதான் என்று சீனா சொல்கிறது-. இன்னொருபுறம், தன்னுடைய சுய ஆட்சி தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று தைவானும் சொல்லி வருகிறது.. இதற்கு நடுவில், தைவானுக்கு சப்போர்ட்டாக அமெரிக்கா உள்ள நிலையில், சீனா உள்ளே புகுந்துள்ளது.. இந்த சூழலில்தான், அமெரிக்கா - சீனா இடையே வார்த்தை மோதலும் வெடித்து கிளம்பி உள்ளது.. இது அடுத்து என்னாகுமோ தெரியவில்லை.. பார்ப்போம்..!