For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்!

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2672,13,60,000 கோடி) வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கியே தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த தயாரிப்புகளால் தோல் வியாதிகள் பர வாய்ப்பு இல்லை என்பதால் சிறிய வயதில் பயன்படுத்தியதை போல் பெரியவர்கள் ஆன பின்பும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

ரசாயனம் கலப்பு

ரசாயனம் கலப்பு

ஆனால் இந்நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட சில தயாரிப்புகளில் ரசாயானம் கலந்திருப்பதால் புற்று நோய் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து வழக்குகளும் ஆங்காங்கு கிளம்பின.

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய்

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஈவா எக்கேவர்ரியா (63) ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு 2007-முதல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாக மரணபடுக்கையில் படுத்துள்ள ஈவா, தன்னுடைய சிறு வயது முதலே ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயனபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ரூ.2672 கோடி நஷ்டஈடு

ரூ.2672 கோடி நஷ்டஈடு

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளத்தை அந்நிறுவனம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 417 மில்லியன் டாலர்கள் (ரூ. 2672 கோடி) வழங்க உத்தரவிட்டுள்ளது.

4-ஆவது முறையாக அபராதம்

4-ஆவது முறையாக அபராதம்

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Johnson
    கடந்த ஆண்டும் அபராதம்

    கடந்த ஆண்டும் அபராதம்

    இதேபோன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A California woman has got Rs. 2600 crores from Johnson & Johnson after she filed a lawsuit claiming that the company’s famous baby powder gave her ovarian cancer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X