For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டு கொன்ற போலீஸ்.. கடைசி நிமிட காட்சிகள் பேஸ்புக்கில் வைரல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: போலீசால் சுடப்பட்ட கறுப்பின நபரின் உயிர் பிரியும் நேரத்தில் அவரை வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலைஸ் நகரில், தோழி லேவிஸ் ரெனோல்ட்ஸ் என்பவருடன் காரில் வேகமாக சென்றுள்ளார், கருப்பினத்தை சேர்ந்த பிலாண்டோ கேசிலின் (32).

அப்போது காரை வழிமறித்த போலீசார் லைசென்சை காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவரோ லைசென்சுக்கு பதிலாக துப்பாக்கியை தூக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார், பிலாண்டோ கேசிலை தங்களிடமிருந்த துப்பாக்கியால் சுட்டனர்.

உயிருக்கு போராடிய கேசிலை, அதே காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் தோழி லேவிஸ். ஆனால், போகும் வழியில் பிலாண்டோ கேசில் உயிர் பிரிந்தது.

கடைசி கட்ட காட்சிகளை வீடியோவாக எடுத்திருந்த அந்த தோழி, அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் தொடர்ந்து கறுப்பின மக்களை போலீசார் துன்புறுத்தி வருவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த வீடியோ அங்கு, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A video of the dying moments of a black man shot by police after being pulled over while driving in the US state of Minnesota went viral Thursday, a day after a video emerged of a similar incident in Louisiana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X