For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதின் ஒன்றும் புத்திசாலியல்ல..: சொல்வது அமெரிக்க அதிபர் ஒபாமா!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கிரிமீயா விவகாரத்தில் ரஷ்யா அதிபர் புதின் தவறு செய்துவிட்டதாகவும் புதின் ஒன்றும் புத்திசாலியும் அல்ல என்றும் அமெரிக்கா அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் ஒருபகுதியான கிரிமீயாவை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்தது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன.

USA Russia: Obama suggests Putin 'not so smart'

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியடைந்தது. இது ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மதிப்பை மிகக் கடுமையாக பாதித்தது. டாலருக்கு நிகரான ரூபிள் பாதியாகக் குறைந்துவிட்டது. ரூபிளை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கி வட்டி வீதத்தை மிக அதிக அளவுக்கு 17% உயர்த்தியது.

ஆனால் ரஷ்யாவின் பொருளாதரம் மிக மோசமாக வீழ்ந்து கிடக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

டாலருக்கு நிகரான ரஷ்யாவின ரூபிள் நாணயத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது. ருபிளை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கி வட்டி வீதத்தை மிக அதிக அளவுக்கு 17% உயர்த்தியுள்ளது.

இருந்தும் ரஷ்யாவின் பொருளாதரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா வானொலிக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளதாவது:

கிரிமீயாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதன் மூலம் அந்த நாட்டு அதிபர் புதின் ராஜதந்திரத் தவறைப் புரிந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வாஷிங்டன்னில் இருந்த பலர் கூட, ரஷ்யா அதிபர் தன்னுடைய எதிர்ப்பாளர்களை இலகுவாக சமாளித்துச் செல்கிறார்; மற்றவர்களை மிரட்டி ரஷ்யாவை விரிவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கருதினார்கள்.

ஆனால் இப்போது ரஷ்யாவுக்கு வெளியே இருப்பவர்கள் புதின் செய்தது புத்திசாலித்தனமான காரியமில்லை என்று கருதுகிறார்கள். புதின் சிறந்த மேதை என்று பலரும் எண்ணிக் கொண்டிருப்பது தவறு என்றும் அவர் ஒன்றும் புத்திசாலி அல்ல என்பதும் ரஷ்யாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது,

பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகளும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவும் ரஷ்யாவை நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஈரானில் உடனடியாக தூதரகம் திறக்கும் அமெரிக்காவுக்கு இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படவேண்டும்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

English summary
US President Barack Obama has said Vladimir Putin made a "strategic mistake" when he annexed Crimea, in a move that was "not so smart". Those thinking his Russian counterpart was a "genius" had been proven wrong by Russia's economic crisis, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X