For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் அமெரிக்க ஏவுகணைகள்.. "குழந்தை சாமி"க்கு ட்ரம்ப் பெப்பே!

உலக நாடுகளில் எதிர்ப்பை மீறிய வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. இதனை கண்டிக்கும் அமெரிக்கா, வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்

By Devarajan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணை அழிப்புச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், " கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா நேற்று வெற்றிகரமாக நடத்தியது.

USA shoots down medium-range Missile destroying test in Hawaii test

அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை, கலிபோர்னியாவின் வேன்டென்பெர்க் விமானப் படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.

முன்னதாக வடகொரியா தலைநகர் பியோங்கியாங்கின் கானான் பகுதியிலிருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தி சோதனை செய்திருந்தது. அதிலும் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்திலிருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனை, வடகொரியாவின் 13வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி ஏவுகணை சோதனையை நடத்தி கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை அதிகப்படுத்தி வருகிறது.

English summary
North Korea tensions: United States of America shoots down medium-range Missile destroying test in Hawaii test .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X