For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களிடமும் ஏவுகணை இருக்கிறது... சோதனை நடத்தி வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவும் நிலையில், வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது அமெரிக்கா.

By Devarajan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது அமெரிக்கா.

ஓரே ஆண்டில் 9 ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்து மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதனையடுத்து அமெரிக்கா, தென்கொரியா,ஜப்பான் மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

USA successfully tests ICBM defense system in the Pacific

இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்திநடைபெற்ற இந்தச் சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் சோதனையையும் அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Pentagon said 'kill vehicle' to knock down an intercontinental ballistic missile over the Pacific Ocean on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X