For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவால் இறப்பதை குறைக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள்.. ஆய்வில் நல்ல தகவல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டேடின்ஸ் எனப்படும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தினால் இறப்பு விகிதம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5.8 லட்சம் மக்கள் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால் பல்லாயிரம் பேர் தினமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் கடுமையான சுவாச பிரச்சனையால் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் உருவாக்கப்பட்டு தற்போது ஆய்வில் அவை உள்ளன. வரும் டிசம்பருக்குள் மருந்துகள் வந்துவிடும் என்ற நம்பிக்கை தகவல்கள் உலா வருகின்றன.

கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல் கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல்

இறப்பு விகிதம் சரிவு

இறப்பு விகிதம் சரிவு

இதனிடையே கொரோனா குறித்து பல்வேறு ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்த கட்டுரை செல் வளர்சிதை மாற்றம் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, ஸ்டேடின்ஸ் எனப்படும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் இறப்பு விகிதத்தை குறைப்பது தெரியவந்துள்ளது. உடலுக்கு கொலஸ்ட்ரால் தயாரிக்கும் ஒரு பொருளைத் தடுப்பதன் மூலம் ஸ்டேடின்கள் உங்கள் உடலில் கொழுப்பைக் குறைக்கின்றன.

என்ன மருந்து

என்ன மருந்து

ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் (ACE) தடுப்பான்கள் மற்றும் ஆஞ்சியோடென்சின் II ஏற்பி தடுப்பான்கள் (ARB கள்) எனப்படும் (angiotensin-converting enzyme (ACE) inhibitors and angiotensin II receptor blockers (ARBs) ) என்று அழைக்கப்படும் ஸ்டேடின்கள் என்ற மருந்துடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கொண்டு கூட்டு சிகிச்சை அளிக்கும் போது. இறப்பு ஆபத்தோ அல்லது எதிர்மறை விளைவுகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியில் காட்டுகிறது.

நல்ல பலன்

நல்ல பலன்

"இந்த முடிவுகள் கொரோனா உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டேடின் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் சாத்தியமான நன்மைகளை தருகின்றன. மேலும் COVID-19- தொடர்புடைய இறப்புக்கு எதிராக ஸ்டேடின்கள் பாதுகாப்பை அளிக்கிறதா என்பதை தீர்மானிக்க வருங்கால ஆய்வுகளுக்கு ஒரு நல்ல ஒரு பகுத்தறிவை வழங்குகிறது" என்று வுஹான் பல்கலைக்கழகத்தின் மூத்த எழுத்தாளர் ஹாங்லியாங் லி கூறினார்.

தடுப்பூசி வர தாமதம்

தடுப்பூசி வர தாமதம்

ஹாங்லியாங் லி மேலும் கூறுகையில். " COVID-19 நோயாளிகளுக்கு ACE தடுப்பான்கள் அல்லது ARB களை பரிந்துரைப்பதன் நன்மை அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த மருத்துவ ஆதாரங்களை குவிப்பதில் முக்கியமான பங்களிப்பை எங்களது இந்த கண்டுபிடிப்புகள் வழங்கியுள்ளன. COVID-19 க்கான தடுப்பூசி அல்லது மருந்துகள் வெளிவர தாமதம் ஆகலாம் அல்லது இந்த ஆண்டு முழுவதும் கூட கிடைக்காது என்பதால், மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான தேர்வாக இருக்கலாம் என்றார்.

உறுப்புகளை பாதுகாக்கிறது

உறுப்புகளை பாதுகாக்கிறது

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த மருந்துகள் விலங்குகளில் நுரையீரல் வீக்கத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நோயெதிர்ப்பு உயிரணுக்களை மேம்படுத்துகின்றன. மேலும் நுரையீரல் வீக்கத்தை குறைக்கிறது. நுரையீரல் வீக்கம் அடைவது தான் உறுப்பு சேதம் போன்ற கடுமையான கொரோனா சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிறது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவை ACE2 இன் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன. இந்த ACE2 தான். S SARS-CoV-2 வைரஸை கட்டுப்படுத்துகிறது அதன் ஹோஸ்ட் செல்களுக்கு நுழைகிறது. கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பாதிப்பிலிருந்து ACE2 நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதுகாக்கிறது .

இறப்பு விகிதம் குறைவு

இறப்பு விகிதம் குறைவு

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள 21 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 13,981 கோவிட் -19 நோயாளிகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த நோயாளிகளில், 1,219 பேருக்க ஸ்டேடின்களைப் பயன்படுத்தினர், ஸடேடின் மருந்தை பயன்படுதியதில் 5.5 சதவீதம் ஆக இறப்பு விகிதம் குறைந்து இருந்தது. ஆனால் ஸடேடின் மருந்து பயன்படுத்தாதவர்களிடம் 6.8 சதவீதம் ஆக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

English summary
Using cholesterol-lowering drugs called statins is associated with a lower death rate in patients hospitalised with COVID-19: Study
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X