For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பமா இருக்கீங்களா பெண்களே?- அப்போ பாரசிடமால் மருந்து சாப்பிடவே சாப்டாதீங்க!

Google Oneindia Tamil News

லண்டன்: பெண்கள் கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்கு கேடு விளைவதுடன் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாகும் என்று ஆய்வில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் பெரும்பாலும் வலி நிவாரண மருந்தாக பாரசிடமால் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Using paracetamol during pregnancy may harm fertility

இந்நிலையில் அவற்றை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

லண்டன் பல்கலை ஆய்வு:

லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர். கர்ப்பமாக இருந்த எலிகளுக்கு பாரசிடமால் மருந்துகள் வழங்கப்பட்டன.

கருமுட்டை குறைவு:

அதை தொடர்ந்து அவற்றுக்கு பிறந்த பெண் எலிகளுக்கு சிறிய கருப்பைகளும், அதில் இருந்து குறைந்த அளவிலான கரு முட்டைகளும் உற்பத்தியாகின.

இனப்பெருக்கம் தடை:

அதன் மூலம் குறைந்த அளவிலேயே அவை குட்டிகளை ஈன்றன. அதே நேரத்தில் பிறந்த ஆண் எலிகளின் விந்தணுவில் குறைந்த அளவிலான செல்கள் இருந்தன. இதனால் சரிவர இனப்பெருக்கம் நடைபெறவில்லை.

பெண்களுக்கும் அதேதான்:

பொதுவாக எலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இனப் பெருக்க உறுப்புகளும், முறைகளும் ஒரே மாதிரி தான் உள்ளது. இதனால் கர்ப்ப காலத்தின் போது பெண்கள் பாரசிடமால் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

English summary
Using painkillers in pregnancy may reduce fertility in subsequent generations, warns a research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X