For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலர் தினம்: பிப்.14ல் தம்பதிகளுக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாடிகன் நகரம்: போப் பிரன்சிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தம்பதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காதலர் தினம் பிப்ரவரி 14-ந்தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

pope

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவரை கொலை செய்து விட்டனர். எனவே, அவரது நினைவாக பிப்ரவரி 14-ந்தேதி வாலன்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த காதலர் தினம் வாடிகன் நகரில் கொண்டாடப்பட மாட்டாது. ஆனால் இந்த வருடம் காதலர் தினத்தன்று இவ்விழா மறைமுகமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டை போப் ஆண்டவர் பிரான்சிஸ் செய்துள்ளார். அதற்கான அறிவிப்பு போப் ஆண்டவர் தலைமையிலான கவுன்சிலில் இருந்து பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற பிப்ரவரி 14-ந்தேதி வாடிகன் நகரத்தில் ஒரு விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்புபவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் திருமணம் ஆனவர்களாகவும் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்களுடன் பொதுமக்கள் சிலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

English summary
Looking for that special place to celebrate Valentine's Day this year? Pope Francis on Tuesday set a date for engaged heterosexual couples at a special general audience with him in the Vatican on February 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X