For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வயதானவர்களை இளமையாய் மாற்ற வந்துருச்சு “வேம்பயர் ரத்த தெரப்பி”

Google Oneindia Tamil News

லண்டன்: வயதாகி விட்டதே என்ற கவலையா.. கவலையை விடுங்கள், உங்களை மீண்டும் துடிப்பான இளைஞர் அல்லது இளைஞியாக்க விஞ்ஞானிகள் புது ரத்தத்துடன் காத்துள்ளனர்.

கிட்டத்தட்ட ரத்ததத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரத்தக் காட்டேறி கதை போலத்தான் இருக்கிறது இதைப் பார்த்தால்.

ஆனால் விஞ்ஞானிகள் அதைத்தான் பரிந்துரைக்கிறார்கள் - மீண்டும் இளமையைத் திரும்பப் பெறுவதற்கு.

இளைஞர்கள் ரத்தம்:

இளைஞர்கள் ரத்தம்:

அதாவது வயதானவர்கள் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து விட்டு இளைஞர்கள் அல்லது இளம் பெண்களின் ரத்தத்தை உடலில் செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.

எலிகளிடம் சோதனை:

எலிகளிடம் சோதனை:

இதை தற்போது ஆய்வக அளவில், எலிகளிடம் மட்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அடுத்து வயதானவர்களிடம் இந்த சோதனையை நடத்தவுள்ளனராம்.

உடலைப் புதுப்பிக்கும்:

உடலைப் புதுப்பிக்கும்:

இளம் ரத்தத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையாகவே அந்த ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், நமது உடலைப் புதுப்பித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.

வேம்பயர் தெரப்பி:

வேம்பயர் தெரப்பி:

இதுதொடர்பான ஆய்வை 18 மாத எலியிடம் செய்து பார்த்துள்ளனர். அந்த எலிக்கு, 3 மாத எலியின் ரத்தத்தை திரும்பத் திரும்பச் செலுத்தி சோதனையிட்டுள்ளனர். இதற்கு வேம்பயர் தெரப்பி என்று பெயரும் சூட்டியுள்ளனர்.

இளரத்தம் பாயும்:

இளரத்தம் பாயும்:

இந்த ஆய்வின் முடிவில் இள ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலிக்கு நினைவாற்றல் அதிகரித்ததாம். இளம் எலி போல சுறுசுறுப்பாகவும் அது செயல்பட்டதாம்.

வயதில் மாற்றங்கள்:

வயதில் மாற்றங்கள்:

மேலும் அந்த வயதான எலியின் மூளையில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்பட்டதாம்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்கரான டாக்டர் டோனி விஸ் கோரே தலைமையிலான குழுவினர் இதுகுறித்துக் கூறுகையில், எங்களது புள்ளிவிவரத்தின்படி இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலி சுறுசுறுப்பாக இளம் எலி போல செயல்பட்டது.

இளமைத் துடிப்பு:

இளமைத் துடிப்பு:

அதனிடம் இளமைத் துடிப்பும் காணப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன. மனிதர்களிடம் அடுத்து இந்த சோதனையைச் செய்யவுள்ளோம். இந்த ஆய்வு வயோதிகம் காரணமாக ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளைச் சொல்லும் என்று திடமாக நம்புகிறோம் என்றார்.

அல்ஸீமர் நோய் தீர்வு:

அல்ஸீமர் நோய் தீர்வு:

குறிப்பாக வயதானவர்களுக்கு வரும் அல்ஸீமர் நோய்க்கான தீர்வுகள் இதில் கிடைக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும்.

English summary
Although the ghoulish experiment was conducted on laboratory mice, the next step could involve a study of elderly humans.The researchers believe young blood may contain natural chemicals that turn back the clock to rejuvenate the ageing brain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X