For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெய்லி எக்சர்ஸைஸ் செய்யனும், அந்த பாஸ்டாவைத் தூக்கிப் போட்ருங்க.. சரியா.?

Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் முதலாம் பிராந்சிஸுக்கு எடைப் பிரச்சினை வந்து விட்டது. அவரது எடை வயதுக்கு ஏற்றார் போல இல்லை என்றும் கூடுதலாக இருப்பதாகவும் கூறியுள்ள டாக்டர்கள் முதலில் அவர் பாஸ்டா சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டார்களாம்.

மேலும் உடல் எடையைக் குறைக்க எக்ஸர்ஸைஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனராம்.

Vatican doctors tell Pope Francis to lay off pasta, exercise more after weight gain

தற்போது போப்பாண்டவரை வாடிகன் டாக்டர்கள் டயட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். எதைச் சாப்பிடக் கூடாது, எதைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து லிஸ்ட் போட்டுக் கொடுத்து விட்டனர்.

பாஸ்டா சாப்பிடுவதை வெகுவாக குறைக்க உத்தரவிட்டுள்ளனர். அதுதான் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாம்.

78 வயதாகும் போப்பாண்டவர் தற்போது வாரத்திற்கு வெறும் 2 தடவை மட்டுமே பாஸ்டா சாப்பிடுகிறாராம். கடந்த 2013ம் ஆண்டு போப்பாண்டவராக வந்தது முதலே பிரான்சிஸின் எடை அதிகரித்தவண்ணம் உள்ளதாம். இத்தாலி சாப்பாடுதான் அவரது உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாம்.

இதையடுத்தே தற்போது டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் பிரான்சிஸ். மேலும் தினசரி உடற்பயிற்சியிலும் அவர் ஈடுபடுகிறாராம். தினசரி கட்டாயம் நடக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் எடை அதிகரிப்பு காரணமாக முதுகுவலி உள்ளிட்டவை அவருக்கு வந்து விட்டதாம்.

English summary
It’s time for the pope to lay off the lasagna. Vatican doctors put Pope Francis on a diet and recommended he eat less pasta to counter a recent weight gain, Italy’s ANSA news wire reported. On the new doctor-ordered plan, the 78-year-old can eat pasta just twice a week. The Argentina native has steadily gained weight since arriving at the Vatican in 2013 due to his richer Italian diet and a decrease in exercise, his doctors said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X