For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா பேஷ் பேஷ்... விண்வெளி ஆய்வகத்தில் கீரை அறுவடை.. ‘அப்படியே’ சாப்பிட்ட விண்வெளி வீரர்கள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வகப் பண்ணையில் விளைந்த கீரையை அறுவடை செய்து, அவற்றை விண்வெளி வீரர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால், நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியின் ஆய்வகம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சிலர் தங்கி இருந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த விண்வெளி வீரர்களுக்கு தேவையான ஆப்பிள், கேரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு அதிகம் செலவாகிறது. எனவே, இதற்கு மாற்றாக விண்வெளியிலேயே உணவு பயிரிட விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்கான முயற்சியில் நாசா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது.

வெஜ்-01...

வெஜ்-01...

நீண்ட ஆய்வின் பலனான வெஜ்-01 என பெயரிடப்பட்ட சிவப்பு நிற கீரையை நாசாவும், ஆர்பிட்டல் தொழில் நுட்ப கழகமும் இணைந்து கடந்த ஜூலை 8-ந் தேதி அங்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தோட்டத்தில் ஒட்டு முறையில் விதைத்தனர்.

சிரிஞ்ச் மூலம் தண்ணீர்...

சிரிஞ்ச் மூலம் தண்ணீர்...

இதற்கென அந்தக் கீரை விதைகள் 15 மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. இந்த கீரை செடிகளுக்கு சிரிஞ்ச் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டது.

கீரை அறுவடை...

கீரை அறுவடை...

இந்நிலையில், திட்டமிட்டபடியே கீரை விதைகள் முளைத்து 33 நாட்கள் வளர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி நேற்று இரவு அந்தக் கீரை அறுவடை செய்யப்பட்டது.

அப்படியே சாப்பிட்ட வீரர்கள்...

அப்படியே சாப்பிட்ட வீரர்கள்...

பூமிக்கு வெளியே விளைய வைக்கப்பட்ட அந்த கீரையை விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி முதல் ஆளாக வேக வைக்காமல் பச்சையாகவே ருசி பார்த்தார். பின்னர், ‘ஆகா கீரை அற்புதமாக உள்ளது என அவர் பாராட்டினார்.

ஆலிவ் சேர்த்து...

ஆலிவ் சேர்த்து...

இந்தத் தகவலை அவர் நாசாவுக்கும் அனுப்பி வைத்தார். அவரை தொடர்ந்து விண்வெளியில் இருக்கும் மற்ற வீரர்களும் ஆலிவ் எண்ணை, வினிகர் சேர்த்து கீரையை ருசி பார்த்தனர்.

சுத்தம் செய்து...

சுத்தம் செய்து...

சாப்பிடுவதற்கு முன்னதாக சிட்ரிக் அமிலம் சார்ந்த கரைசல் மூலம் கீரையை விண்வெளி வீரர்கள் சுத்தம் செய்தனர்.

நாசா மகிழ்ச்சி...

நாசா மகிழ்ச்சி...

விண்வெளியில் வெற்றிகரமாக கீரை விளைந்துள்ளதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு விண்வெளியில் உணவு உற்பத்தி செய்வது தேவைக்குப் பயன்படுவது மட்டுமின்றி, அங்குள்ள வீரர்களுக்கு மனரீதியாக உற்சாகம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை...

மேலும், இந்த முயற்சி வெற்றி அடைந்ததன் மூலம், எதிர்காலத்தில் நீண்ட தூர செவ்வாய் கிரக பயணத்துக்கு விண்வெளி உணவு உற்பத்தி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
NASA astronauts have tasted their first bites of fresh food grown in space — red romaine lettuce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X