For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்.. உலக தலைவர்கள் இரங்கல்!

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்-வீடியோ

    ஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

    இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    Vietnam President Tran Dai Quang dies at 61

    இந்த நிலையில் இன்று காலை இவர் உடல் மோசமடைந்தது. இதன் காரணமாக இன்று காலை இவர் மரணம் அடைந்தார்.

    கடந்த 2016 ஏப்ரலில் இவர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்த நாட்டில் உள்ள 3 முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறார். இவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் வியட்நாமை சேர்ந்தவர்.

    இவரது இரங்கல் காரணமாக அந்த நாட்டில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    உலக தலைவர்கள் பலர் அவரது இழப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியும், டிரான் டாய் குவாங்கும் கடந்த மார்ச் மாதம் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vietnam President Tran Dai Quang dies at 61.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X