For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியட்நாமில் மீண்டும் தொற்று.. ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க முடிவு

Google Oneindia Tamil News

ஹனோய்: வியட்நாமின் சுகாதார அமைச்சகம் ரஷ்யாவின் கொரோனா ( COVID-19) தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளது, அந்நாட்டின் தொலைக்காட்சி இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாம் சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸின் உள்ளூர் கொத்துப்பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அதை சமாளிக்க ரஷ்யாவின் உதவியை நாட முடிவு செய்துள்ளது.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    உலகின் முதல் COVID-19 தடுப்பூசியின் முதல் பேட்ஜ் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று ரஷ்யா கடந்த புதன்கிழமை கூறியது. ஆனால் ரஷ்யா உடனே கொரோனா தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் அளித்தால் அதன் பாதுகாப்பு குறித்து சில வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் பாதுகாப்பு குறித்த கவலைகள் அனைத்தும் "ஆதாரமற்றவை" என்று ரஷ்யா நிராகரித்துள்ளது..

    இதற்கிடையில், வியட்நாம் நாடும் சொந்தமாக COVID-19 தடுப்பூசியை தொடர்ந்து உருவாக்கி வருவதாக வியட்நாமின் சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது. எனினும் தற்போதைய நாட்டில் உள்ளூர் தொற்று பரவல் சூழல் காரணமாக ரஷ்யாவின் கொரோனா ( COVID-19) தடுப்பூசி வாங்க முடிவு செய்துள்ளது வியட்நாம்.

    டிபி தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. ஜெர்மனியின் 3வது கட்ட ஆய்வில் நம்பிக்கை தகவல்டிபி தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. ஜெர்மனியின் 3வது கட்ட ஆய்வில் நம்பிக்கை தகவல்

    புதிதாக பரவல்

    புதிதாக பரவல்

    அதிகப்படியான சோதனை, தொடர்பு-தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முன்பு கொரோனா தொற்று பரவிய போது வெற்றிகரமாக வியட்நாம் முறியடித்து உலக நாடுகளிடம் பாராட்டை பெற்றது. ஆனால் ஆனால் இப்போது பிரபலமான சுற்றுலா நகரமான டனாங்கின் பல இடங்களில் தொற்றுநோய் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த வியட்நாம் போராடி வருகிறது. வியட்நாமில் கடந்த ஜூலை 25 அன்று புதிதாக தொற்று பரவ தொடங்கியது.

    மிக அதிக ஆபத்து

    மிக அதிக ஆபத்து

    வியட்நாமில் மொத்தம் 911 நோய்த்தொற்றுகள் இதுவரை பதிவாகியுள்ளன, இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது மீண்டும் கொரோனா பரவி வருவதால் வைரஸ் பரவலாக பரவுவதற்கான ஆபத்து "மிக அதிகம்" என்று பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் எச்சரித்துள்ளார், மேலும் அடுத்த பல நாட்கள் தொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதுதுதான் நாட்டில் "முக்கியமானதாக" இருக்கும் என்றும் கூறினார்.

    பாதுகாப்பாக வாழ வேண்டும்

    பாதுகாப்பாக வாழ வேண்டும்

    வியட்நாமின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவர் வு டக் அணை வெள்ளிக்கிழமை, வியட்நாமுக்கு "வைரஸுடன் பாதுகாப்பாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். "நாம் ஒரு ஏழை நாடு. வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம், எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்றும் அணை கூறினார்.

     எத்தனை டோஸ்

    எத்தனை டோஸ்

    ரஷ்ய தடுப்பூசியை வாங்க முடிவு செய்துள்ள வியட்நாம் எத்தனை டோஸ் பெறுவது என்பது குறித்து ஆர்டகள் வெளியிடப்படவில்லை. மேலும் அவற்றைப் பெறுவது எப்போது என்பது குறித்தும் கருத்து கூறவில்லை. வியட்நாமிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசி 2021 இறுதிக்குள் கிடைக்கும் என்று அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

    English summary
    Vietnam's health ministry has registered to buy a Russian COVID-19 vaccine after new outbreak of the coronavirus following months of no local cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X