For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் தலைமறைவு விஜய் மல்லையா !

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Vijay Mallya says he paid 'just $100' to acquire CPL team Barbados Tridents

இதையடுத்து லண்டன் தப்பிச்சென்ற விஜய் மல்லையா அங்கேய தங்கியுள்ளார். இந்நிலையில் கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கியுள்ளார் மல்லையா.

இது‌குறித்து விஜய் மல்லையா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே இதற்காக செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அணியின் மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் ‌உள்ள நிலையில், தம்மையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ள மற்ற உ‌ரிமையாளர்கள் சம்மதித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது நிலை குறித்து பார்படோஸ் பிரதமரிடம் தெரிவித்ததையடுத்து, TRIDENTS அணிக்கு அரசு மானியம் வழங்க அவர் சம்மதித்ததாகவும் மல்லையா கூறியுள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகினார்.

கடந்த பிப்ரவரி மாதம் பார்படோஸ் அணியின் பங்குதாரர் ஆகியிருப்பதாகவும் மல்லையா கூறியுள்ளார். இதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.

English summary
Troubled businessman Vijay Mallya has claimed that he paid mere USD 100 to buy Barbados Tridents, a franchise in the Caribbean Premier T20 League (CPL).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X