For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர கலவரம்.. 32 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளால், இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

தஜிகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள சிறையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐ.எஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் குறிப்பிட்ட சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Violent riots by ISIS extremists in Tajikistan country prison.. 32 dead

பாதுகாப்புகளுக்கிடையேயும் அச்சிறையில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தஜிகிஸ்தான் அரசு வாக்தட் நகரத்தில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாகியது. ஆயுதமேந்திய சில கைதிகள் 3 சிறைக்காவலர்களையும் 5 கைதிகளையும் படுகொலை செய்தனர்.

எனவே கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வர வைக்கப்பட்டனர். அவர்கள் வந்து கலவரம் செய்த கைதிகளுக்கிடையே சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பாதுகாப்பு படையினர் மீது சில கைதிகள் தாக்குதல் நடத்த துவங்கினர்

மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா? மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா?

நிலைமை கைமீறி போனதையடுத்து வேறு வழியின்றி கலவரத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது இந்த கலவரத்தில் மொத்தம் 3 சிறைக் காவலாளிகள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் ஏற்பட்ட கலவரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க சிறையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

English summary
The incident that killed 32 people in a Tajikistan jail a terrible riot has caused serious shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X