For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு வெண் புள்ளி உள்ளது, அதற்கு என்ன?: டாட்டூ போட்டு பிரபலமான நியூயார்க் பெண்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது உடலில் உள்ள வெண் புள்ளிகளை பிறர் பார்ப்பதால் அவர் தனது கையில் இதற்கு பெயர் விடிலிகோ என்று பச்சை குத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் டிஃபனி போஸ்டெராரோ(24). அவருக்கு விடிலிகோ என்னும் உடலில் வெண் புள்ளிகள் ஏற்படும் நோய் உள்ளது. இதனால் பலரும் அவரது உடலில் உள்ள வெண் புள்ளிகளை உற்றுப்பார்ப்பது அவருக்கு அசௌகரியமாக இருந்துள்ளது.

Viral: People Were Staring at Her. She Got a Tattoo to Make Them Stop

இதையடுத்து அவர் தனது கையில் வெண் புள்ளி உள்ள இடத்தில் இதற்கு பெயர் விடிலிகோ என்று பச்சை குத்தியுள்ளார். இதன் மூலமாவது மக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை நிறுத்துவார்கள் என்று நம்புகிறார்.

இது குறித்து டிஃபனி கூறுகையில்,

நான் பள்ளியில் படிக்கும்போதே பிற குழந்தைகள் என் உடலில் உள்ள வெண் புள்ளிகளை பார்த்து என்னை பசு, டால்மேஷியன், பேய் மூஞ்சி, தீ விபத்தில் சிக்கியவள் என்று கிண்டல் செய்தார்கள்.

புள்ளிகளை மறைக்கும்படி கோட் அணிந்து வந்தேன். அப்போது தான் அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல் 2014 போட்டியில் கலந்து கொண்ட வின்னி ஹார்லோவுக்கும் என்னைப் போன்றே வெண் புள்ளிகள் இருந்தும் அவர் அதை மறைக்க முயலாததை டிவியில் பார்த்தேன்.

அவரை அணுகியபோது அவர் என்னைப் போன்றே அவதிப்படும் நபர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர் என்றார்.

டிஃபனி கையில் பச்சை குத்தியுள்ள செய்தி மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

English summary
A 24-year old New York based woman has become famous by having a tatoo saying 'It is called Vitiligo' on her forearm where she has a skin condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X