For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த ஆபத்து நம்மை நோக்கி வருது.. ஓடு, ஓடு.. ஆஸி. காட்டு தீ பயங்கரத்தை விளக்க இந்த ஒரு போட்டோ போதும்

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    கான்பெரா: ஆஸ்திரேலியாவை உலுக்கி வரும் காட்டுத் தீ பிரச்சினையில் சிக்கி, சுமார் 480 மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நாடு முழுவதும் காட்டு தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் சிக்கி, நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகின.

    Viral: Pictures of Two kangaroos escaped from Australia bushfire

    50 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பிலான (12.4 மில்லியன் ஏக்கர்) விவசாய நிலங்கள் தீ விபத்தில் பாதிக்க்ப்பட்டுள்ளன. குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சிட்னி பல்கலைக்கழகத்தின் சூழலியல் வல்லுநர்கள், நடத்திய ஆய்வில், காட்டுத் தீ தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் (480 மில்லியன்) பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன இறந்துவிட்டதாக மதிப்பிடுகின்றனர்.

    பார்க்கப் பார்க்க அழுகை வருகிறது.. பற்றி எரியும் ஆஸி. காடுகள்.. கருகி அழியும் விலங்கினங்கள்! பார்க்கப் பார்க்க அழுகை வருகிறது.. பற்றி எரியும் ஆஸி. காடுகள்.. கருகி அழியும் விலங்கினங்கள்!

    "நியூ சவுத் வேல்ஸின் மூன்று மில்லியன் ஹெக்டேர்களில் மட்டும் சுமார் 10 நாட்களுக்கு முன்பு வரை தீயில் நாசமாகியதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம், அநேகமாக 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்" என்று பேராசிரியர் டிக்மேன் கூறினார்.

    "நிச்சயமாக, கங்காருக்கள் அல்லது ஈமுக்கள் போன்ற பெரிய விலங்குகள், பல பறவைகள், தீ நெருங்கும்போது அதை விட்டு விலகிச் செல்ல முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

    இப்படியாக தீயை பார்த்ததும், இரு கங்காருக்கள், சாலையை கடந்து தப்பியோடும் ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த படம் பார்ப்போர் நெஞ்சங்களை கனமாக்கும் வகையில் உள்ளது.

    English summary
    Pictures of Two kangaroos escaped from Australia bushfire goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X