For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்கையில் மாற்றமில்லை... விசாவுக்கு விண்ணப்பியுங்கள், காத்திருங்கள் மோடி: அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விசா குறித்தான நீண்ட காலக் கொள்கையில் மாற்றமில்லை. எனவே, மோடியும் மற்றவர்களைப் போல விசாவுக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரும், தற்போதைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் நீண்ட காலமாக குழப்பமும், சர்ச்சையும் நிலவி வருகிறது.

Narendra modi

இந்நிலையில், நேற்று நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ஃப். அப்போது, ‘அப்போது அமெரிக்க விசா கேட்டு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி விண்ணப்பித்துள்ளாரா?' எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, ‘விசா விண்ணப்பங்களும் விண்ணப்பங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களும் மிகவும் ரகசியமானவை. விசா வழங்குவது தொடர்பான நமது நீண்டகால கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.

விசா கேட்டு மோடி விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம். இதர விண்ணப்பதாரர்களை போலவே அவரும் விண்ணப்பத்தின் சீராய்வு வரை காத்திருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Asserting that there has been no change in its visa policy, the US on Tuesday said Narendra Modi, who has been named BJP's prime ministerial candidate, is welcome to apply for a visa and wait for a review.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X