For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி கூகுள் மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்... வருகிறது புது வசதி!

இனி கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: இனி கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதிகளை பெற்ற கூகுள் மேப்பின் புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் எப்படி இருக்கும் என மொத்த டெக் உலகமும் தற்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது.

இந்த புதிய அப்டேட் உள்ள அப்ளிகேஷனை மொபைலிலும், கணினியிலும் எப்போதும் போல பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியாக எதுவும் உபகரணம் வாங்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது.

 உள்ளதை உள்ளபடி காட்டும் மேப்ஸ்

உள்ளதை உள்ளபடி காட்டும் மேப்ஸ்

உலகில் எந்த இடத்திற்கும் யாரிடமும் வழி கேட்காமல் செல்லும் வகையில் அனைவருக்கும் உதவியாக இருக்கும் ஆப் கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆப் ஆகும். அமெரிக்காவில் இருக்கும் தெருக்கள் தொடங்கி ஐநாவரத்தில் இருக்கும் தெருக்கள் வரை அனைத்தையும் துல்லியமாக காட்டும் வசதி கொண்டது இந்த கூகுள் மேப்ஸ் ஆப்.
இந்த மேப் வந்த சில நாட்களிலேயே ஹிட் ஆகி இப்போது உலகில் பலராலும் உபயோகிக்கபடுகிறது.

 அடடே அப்டேட்கள்

அடடே அப்டேட்கள்

ஒவ்வொரு முறையும் இந்த ஆப்பில் வெளியிடப்படும் அப்டேட்டில் புதிய அம்சங்கள் நிறைய இணைக்கப்படும். டிராபிக்கை அறிவது, ஆப் லைனில் பார்ப்பது என சில புதிய வசதிகள் உருவாக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெளியிடப்பட இருக்கும் அப்டேட்டில் பதினாறு அடிக்கு பதிலாக பல்லாயிரம் அடி பாய முடிவு செய்திருக்கிறது கூகுள் நிறுவனம். இந்த அப்டேட் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

 கூகுளின் புதிய மேப்ஸ்

கூகுளின் புதிய மேப்ஸ்

கூகுள் மேப்ஸின் இந்த புதிய அப்டேட்டில் சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களையும் பார்க்க வகை செய்துள்ளது கூகுள். பூமியில் இருந்து ஜூம் அவுட் செய்துவிட்டு சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களை தேர்வு செய்து எளிதாக அதை ஜூம் செய்து இதன் மூலம் பார்க்க முடியும். விண்வெளியில் இருக்கும் கிரகங்களை அனைவரும் ரசிக்கும் பொருட்டு இந்த அப்டேட் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 மிக துல்லியமாக அனைத்தையும் காணலாம்

மிக துல்லியமாக அனைத்தையும் காணலாம்

அதுமட்டும் இல்லாமல் அருகில் உள்ள துணைக் கிரகமான நிலா, கிரகங்களான செவ்வாய், புதன், வியாழன் போன்ற கிரகங்களின் மேற்பரப்பை மிக துல்லியமாக இதன் மூலம் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தொலைவில் உள்ள கிரகங்களான புளுட்டோ, நெப்டியூன் போன்ற கிரகங்களின் மேற்பரப்பையும் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இப்போதே மேப்ஸ் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Google Maps has introduced a new update in maps app which allows people to zoom out from Earth and choose other planets and moons in the solar system. It allows us to see the surfaces and parts of the planets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X