For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெடிக்கல் மிராக்கிள்.. 3000 வருடம் முன்பு இறந்தவர், அதே குரலில் பேசினார்.. பேச வைத்தனர்.. அசத்தல்

Google Oneindia Tamil News

கெய்ரோ : 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மதகுருவின் இறந்த உடலுக்கு (மம்மி), ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கி பேச வைத்துள்ளனர். எனவே இதுதான் உண்மையான Mummy returns என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

எகிப்தில், கி.மு. 1099 முதல் 1069 காலகட்டத்தில் வாழ்ந்தவர் நெஸ்யமன் என்ற மதகுரு. பொதுவாக அந்த நாட்டில், உடலை பதப்படுத்தி வைக்கும் நடைமுறை உண்டு. இதற்கு மம்மி என பெயர். இந்த நிலையில்தான், தொல்பொருள் ஆய்வாளர்கள் நெஸ்யமன் மம்மியை சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

இவருக்கு குரல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம், ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது. எனவே, அவரது குரல் எப்படி இருந்திருக்கும் என ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தனர்.

 வட இந்தியாவை விட தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைய காரணமே பெரியார்தான்: பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் வட இந்தியாவை விட தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைய காரணமே பெரியார்தான்: பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்

3டி செயற்கை குரல்

3டி செயற்கை குரல்

இந்த ஆராய்ச்சி - ராயல் ஹோலோவே, லண்டன் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம் மற்றும் லீட்ஸ் அருங்காட்சியக கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, Scientific Reports என்ற இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டது. அதை வைத்து, 3டி அமைப்பில் செயற்கையாக குரல் உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பை பயன்படுத்தி, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கி அசத்திவிட்டனர்.

சத்தமான பாடல்

சத்தமான பாடல்

மதகுரு என்பதால், பாடல்களை சத்தமாக பாடுதல் மற்றும் மதச்சடங்குகளை அவர் செய்திருப்பார். இதனால், அவரது குரல் கடினமானதாகவும், வலிமையானதாக இருந்திருக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருந்தது. அவரின் குரலை, செயற்கைக் குரல் வளையங்களைக் கொண்டு உருவாக்க மருத்துவர்கள் குழு முயற்சி மேற்கொண்டபோது, குரல் வளம் தாங்கள் எதிர்பார்த்த மாதிரியேதான் இருந்தது தெரியவந்தது.

விருப்பம் நிறைவேற்றம்

விருப்பம் நிறைவேற்றம்

குரல் மறு உருவாக்க தொழில் நுட்பம் "நீண்ட காலம் முன்பு இறந்த ஒருவரின் ஒலியைக் கேட்க எங்களுக்கு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது" என்று யார்க் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான ஆய்வு இணை ஆசிரியர் ஜோன் பிளெட்சர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.
பேராசிரியர் பிளெட்சர் இதுபற்றி மேலும் கூறுகையில், தனது மத நம்பிக்கை முறையின் ஒரு பகுதியாக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றி நெஸ்யமனுக்கு அபார நம்பிக்கை இருந்துள்ளது. தனது குரலை மீண்டும் கேட்க வேண்டும் என்பது நெஸ்யமுனின் வெளிப்படையான விருப்பம், என்றும் அவர் கூறினார்.

திசு கெடக்கூடாது

திசு கெடக்கூடாது

"இது உண்மையில் அவரது சவப்பெட்டியில் எழுதப்பட்டுள்ளது. அது தான் அவர் விரும்பியது" என்று பேராசிரியர் பிளெட்சர் கூறினார். "ஒரு வகையில், அந்த விருப்பத்தை 3000 வருடங்கள் பிறகு நாங்கள் நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ளோம்." இவ்வாறு ஜோன் பிளெட்சர் தெரிவித்தார். ஆனால் ஒரு நபரின் குரல்வழியின் மென்மையான திசு கெட்டுப் போகாத முறையில் அப்படியே இருக்கும்போது மட்டுமே இந்த செயல்முறை சாத்தியமாகும். நெஸ்யமுனின் விஷயத்தில், அவரது மம்மி செய்யப்பட்ட உடல் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது. எனவே, இது ஆய்வுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது. லீட்ஸ் ஜெனரல் இன்ஃபர்மேரியில் சி.டி ஸ்கேனரைப் பயன்படுத்தி ஆய்வு குழு அதை உறுதிப்படுத்தியது.

மீண்டும் ஒலிக்கப்போகும் வழிபாடு குரல்

மீண்டும் ஒலிக்கப்போகும் வழிபாடு குரல்

"கர்னக்கிலுள்ள கோவிலில் அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதற்கான குரல் பதிப்பை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று பிளெட்சர் கூறியுள்ளார். தேப்ஸ் (நவீனகால லக்சர்) கர்னக் வளாகத்தில் உள்ள அமுன் கோவிலில் நெஸ்யமுன் மத போதகராக இருந்தார். அவர் ஒரு உயர்ந்த நிலை மத குரு. அதாவது அவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான மேம்பட்ட நிலையை அடைந்துவிட்டார். எனவே கோயிலின் மிக புனிதமான உள் கருவறையில் அமுன் சிலையை அணுக இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என ஆவணங்கள் கூறுகின்றன.

English summary
Scientists have fulfilled a mummified Egyptian priest's wish for life after death - by replicating his voice with artificial vocal chords.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X