For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து பெரும் சுனாமி.. 222 பேர் பலி.. 600 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெடித்து சிதறிய எரிமலை, இந்தோனேசிய பேரிடருக்கு என்ன காரணம்?

    ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தோனேசியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சுனாமி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பெரிய சுனாமி அந்த தீவை தாக்கி உள்ளது.

    இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த சுனாமி தாக்கி உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

     சரியாக எங்கே

    சரியாக எங்கே

    ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாக்கி உள்ளது. இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும்.

    என்ன காரணம்

    ஜாவா தீவிற்கு அருகில் இருக்கும் கரகட்டாவ் எரிமலை வெடித்த காரணத்தால் இந்த சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த எரிமலை வெடித்த 10 நிமிடத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நில அடுக்கு நகர்வு காரணமாக சுனாமி உருவாகி இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    உள்ளே வந்தது

    சுனாமியில் கடல் நீர் மொத்தமாக உள்ளே வந்துள்ளது. பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை சேர்ந்த வீடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 5000க்கும் அதிகமான வீடுகளுக்குள் நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.

    மரணம் எத்தனை

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.

    English summary
    Volcano erputs creates TSunami kills 43 people in Indonesia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X