For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்- புரோக்கர் ஹாஸ்செக் சுவிட்சர்லாந்தில் கைது

Google Oneindia Tamil News

மிலன்: விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத் தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சப் புகாரின் பேரில் அவரை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகஸ்ட்வெஸ்ட்லேன்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கியமான குற்றவாளி இந்த ஹாஸ்செக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லா ரிபப்ளிகா என்ற இத்தாலிய செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், விரைவில் ஹாஸ்செக் இத்தாலிக்குக் கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது. அனேகமாக அவர் அடுத்த வாரம் கொண்டு வரப்படலாம்.

ஹாஸ்செக்கை இத்தாலிக்கு விசாரணைக்காக கொண்டு செல்லலாம் என்று சுவிட்சர்லாந்து கோர்ட் அனுமதி அளித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

ரூ. 3600 கோடியிலான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இந்தியா மற்றும் இத்தாலிய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவில் உள்ள விவிஐபிகளுக்குப் பயன்படுத்துவதற்காக வாங்கியதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் முன்னாள் விமானப்படைத் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வழக்கு கூறுகிறது.

ஆனால் தான் லஞ்சம் வாங்கவில்லை என்று தியாகி ஏற்கனவே மறுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தியாகி, ஹாஸ்செக் உள்ளிட்ட 13 பேரின் பெயரைச் சேர்த்துள்ளது.

தற்போது கைதாகியுள்ள ஹாஸ்செக்கும், இன்னொரு இடைத்தரகரான கார்லோ ஜெரோசா என்பவரும், மொஹாலியைச் சேர்ந்த ஐடிஎஸ் இன்போடெக் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஆரோமேட்ரிக்ஸ் இன்போ சொலூசன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு 50 மில்லியன் ஈரோ லஞ்சப் பணத்தை அனுப்பி வைத்ததாக சிபிஐ கூறியுள்ளது. மேலும் 2.43 கோடி ஈரோ லஞ்சப் பணத்தை அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கிய இவர்கள், அதை ஐடிஎஸ் துனிஷியா நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளனர் என்றும் சிபிஐ கூறுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் இத்தாலிய புலனாய்வு அமைப்புகள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க, அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தின் மூல நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைமை செயலதிகாரி, இடைத்தரகர்களைப் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Swiss authorities have arrested Guido Ralph Haschke, the alleged middleman in the AgustaWestland VVIP helicopter deal, on charges of bribery, Italian media reported on Thursday. According to Italian news website, La Repubblica, Haschke could be brought to Italy by next week in case he prefers not to appeal against extradition proceedings before the Swiss Federal court. The Rs 3,600-crore VVIP AgustaWestland helicopter supply contract is under probe of Italian and Indian agencies for alleged kickbacks paid to Indian officials - including former IAF Chief SP Tyagi - to clinch the deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X