For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாறடிச்சா தாங்க மாட்ட...4 மாசம் தூங்க மாட்ட... "உச்சா" போனால் "திருப்பியடிக்கும்" ஜெர்மனி சுவர்கள்!

Google Oneindia Tamil News

பெர்லின்: பஸ் ஸ்டாண்ட் சுவரைப் பார்த்ததும் நம்ம ஊர் ஆண்கள் மட்டும்தான் ஓடிப் போய் உச்சா போவார்கள் என்றில்லை.. இது உலகளாவிய கருமமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களால் ஜெர்மனியிலும் கூட ஒரே தொல்லையாம். ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் படியான புதிய வகை நவீன சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, துர்நாற்றமும் உருவாகி பெரும் சிரமத்தை உண்டாக்கிவிடுகிறது. சிலர் செய்யும் இந்த காரியத்தினால் அந்த குறிப்பிட்ட பகுதியே பாழாகிவிடுகிறது. இத்தகைய செயல்களைத் தடுக்கும் வகையில் ‘இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள், மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்' என எச்சரிக்கை வாசகங்கள் எழுதினாலும், சிலர் திருந்துவதில்லை.

Walls splash pee back on public urinators in Germany's Hamburg

எனவே, அத்தகைய நபர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில், ஜெர்மனியில் அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் ஹாம்பிரிக் நகரில் உள்ள செயிண்ட் பாலி இரவு விடுதி தான் இந்த யுக்தியைக் கையாண்டுள்ளது. இந்த விடுதியின் சுவர்களில் தண்ணீரை திரும்ப பீய்ச்சியடிக்கும் தன்மை கொண்ட அதிநவீன சூப்பர் பெயிண்ட் அடிக்கப்பட்டு, அதன் அருகில் ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கைப் பலகையில், ‘இங்கு சிறுநீர் கழிக்காதால், அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்' என எழுதப்பட்டுள்ளது. இதே பெயிண்டை அந்த விடுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தங்கள் வீட்டு சுவர்களில் அடித்துள்ளனர். இதன் மூலம் சுவர்களில் சிறுநீர் கழித்தால் விஷமிகளுக்கு தக்க பாடம் புகட்ட வகை செய்யப்பட்டுள்ளது.

திரவப் பொருட்களை திரும்ப பீய்ச்சி அடிக்கும் தன்மை கொண்டது இந்த அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த பெயிண்ட். இதை கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்தது. 3.7 லிட்டர் பெயிண்டின் விலை ரூ. 37 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a bid to teach drunken revellers a lesson, people in a night club locality in Hamburg in Germany have coated their walls with a special paint that bounces back urine on the urinator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X