For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

90 டிகிரி! செங்குத்தாக சர்ரென விழுந்த சீன விமானம்! பின்னணியில் திட்டமிட்ட சதி? நடந்தது என்ன? பின்னணி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    Black Box உண்மைகள் | China Boeing 747 விபத்து | பின்னணியில் திட்டமிட்ட சதி? | #World

    கடந்த மார்ச் 21ம் தேதி சீனாவில் மிகப்பெரிய விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று வர்ணிக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம்தான் இந்த விபத்தில் சிக்கியது. மொத்தம் 123 பயணிகள், 2 பைலட், 7 விமான ஊழியர்கள் என்று 132 பேருடன் இந்த விமானம் பறந்த போது விபத்துக்கு உள்ளானது.

     திடீரென்று மயங்கிய ‛பைலட்’... வானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... பயணி செய்த துணிகர சம்பவம் திடீரென்று மயங்கிய ‛பைலட்’... வானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... பயணி செய்த துணிகர சம்பவம்

    விமானம்

    விமானம்

    737-800NG வகை போயிங் விமானம் ஆகும் இது. இந்த விமானம் குன்மிங் விமான விளையத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருக்கும் குகான்சோ பகுதியில் இருக்கும் விமான நிலையத்திற்கு செல்லும் போது விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து ஏன் கவனிக்கப்பட்டது என்றால், அது செங்குத்தாக பூமியை நோக்கி சென்று விபத்துக்கு உள்ளானது. குஹான்சி பகுதியில் இருக்கும் வுசோவ் என்ற பகுதிக்கு அருகே செல்லும் போது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது.

    எப்படி விபத்து?

    எப்படி விபத்து?

    செங்குத்தாக இந்த விமானம் பூமியை நோக்கி வந்துள்ளது. விமானம் 2.22 மணிக்கு 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அதன்பின் 2.15 நிமிடத்தில் 9,075 அடியை எட்டி உள்ளது. இன்னும் 45 நொடியில் இந்த விமானம் மேலும் மேலும் சரிந்து 3,225 அடியை எட்டி உள்ளது. அதாவது 3 நிமிடத்தில் 29,100 அடி உயரத்தில் இருந்து 3,225 அடியை எட்டி உள்ளது. பொதுவாக இப்படி விமானங்கள் செங்குத்தாக விழாது.

    அறிக்கை

    அறிக்கை

    தொழில்நுட்ப கோளாறே இருந்தாலும் இப்படி விமானம் செங்குத்தாக பூமியை நோக்கி செல்ல வாய்ப்பே இல்லை. இதனால் இந்த விபத்து கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானார்கள். இந்த நிலையில் இந்த விபத்து நடந்ததற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்று குழப்பம் நிலவியது. தற்போது இதை பற்றி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்கா சந்தேகம்

    அமெரிக்கா சந்தேகம்

    அமெரிக்காவை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் தேசிய போக்குவரது பாதுகாப்பு போர்ட் அதிகாரிகள் சீனாவிற்கு சென்று விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை. போயிங் விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் மற்ற விமானங்களுக்கு இதை பற்றி தெரிவிக்க வேண்டும்.

    நல்ல கண்டிஷன்

    நல்ல கண்டிஷன்

    அதை வைத்து பாதுகாப்பு விதிமுறைகளில் மாற்றங்களை செய்ய முடியும். ஆனால் அப்படி அந்த விமானத்தில் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதன்படி விமானத்தில் தொழில்நுட்ப ரீதியான கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. விமான காக்பிட்டில் விமானிகள் பேசிக்கொண்டதை பார்த்தால் எந்த விதமான கோளாறும் இருப்பது போல தெரியவில்லை. பிளாக் பாக்சில் அதற்கான ஆதாரம் இல்லை. விமானிகளும் கோளாறு இருப்பதாக ரிப்போர்ட் செய்யவில்லை.

    விபத்து எப்படி ஏற்பட்டது?

    விபத்து எப்படி ஏற்பட்டது?

    அந்த விமானத்தின் பாதுகாப்பு ரெக்கார்ட் சிறப்பாக இருந்துள்ளது. 1997ல் இருந்து சேவையில் இருக்கும் அந்த விமானம் மிக நல்ல கண்டிஷனில் இருந்துள்ளது. இதனால் விமானத்தின் உள்ளே காக் பிட்டில் இருந்த யாரோ வேண்டும் என்றே விமானத்தை கீழே விழ செய்து இருக்கலாம். அதாவது வேண்டும் என்றே விமானத்திற்கு விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Was the Chinese plane crash an intentional one? Says the US report. சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X