For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்...

Google Oneindia Tamil News

டப்ளின்: கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களின் லட்சியம். அந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் ‘கின்னஸ் ரெக்கார்ட்'.

அயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது முயற்சியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே முதல் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகம்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சாதனைகள் வெளியிடப்படுமே தவிர, யாரையும் சாதனை செய்ய ஊக்குவிக்கப் பட மாட்டாது. அந்த வகையில் வரும் 2014ம் ஆண்டிற்கான சாதனைப் புத்தகத்தில் இடம் பெற போகும் சில வித்தியாசமான, விசித்திரமான சாதனைகள் ஒரு பார்வை....

அம்மாடியோவ்....

அம்மாடியோவ்....

உடம்பா இல்லை எலாக்ஸ்டிக் கயிறா என ஆச்சர்யப் படும் அளவிற்கு உடலை வளைத்து நெளித்து சாகசங்கள் செய்கிறார் இந்த பிலிப்பைன்ஸ் பெண் லீலானி பிராங்கோ. இவர் கைகளை ஊன்றி, உடலைப் பின்பக்கமாக சுழற்றுவதில் வல்லவர். உடலை பலவாறு திருகி வளைக்கும் உடற் பயிற்சியாளர் என்ற பிரிவில் இவரது பெயர் கின்னஸில் இடம் பெற இருக்கிறது.

அமெரிக்கப் பெண்....

அமெரிக்கப் பெண்....

உலகிலேயே மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண் என்ற பிரிவில் இடம் பெற போகிறார் அமெரிக்கப் பெண்மணியான அன்னி ஹவ்கின்ஸ். இவரது கீழ் மார்பக சுற்றளவு 109.22 செ.மீ.(43 இன்ச்) மற்றும் மேல் மார்பகச் சுற்றளவு 177.8 செ.மீ.(70 இன்ச்) ஆகும்.

மிகப்பெரிய மூக்கு....

மிகப்பெரிய மூக்கு....

உலகிலேயே மிகப் பெரிய மூக்குடன் வாழும் மனிதர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் துருக்கியைச் சேர்ந்த மெஹ்மத் ஓசிரெக். இவரது மூக்கின் நீள்ம் 8.8 செ.மீ. அதாவது 3.46 இன்ச்.

மிக உயரமான நாய்...

மிக உயரமான நாய்...

11.8 செ.மீ நீளத்தில் 7அடி 4 இன்ச் அகலத்தில் உள்ள இந்த நாயின் ஓனர் பெயர் டெனிஸ் டூர்லக். இதன் எடை 70.3 கி. நாளொன்றுக்கு 12 கப் உணவு எடுத்துக் கொள்கிறதாம் இந்த நாய்.

மிகக் குள்ளமான மனிதர்...

மிகக் குள்ளமான மனிதர்...

நேபாளைச் சேர்ந்த சந்திரா பாஹதூர் தான் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக 2014ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறார். இவரது உயரம் 54.6 செமீ மட்டுமே.

மிகப் பெரிய பாம்பு....

மிகப் பெரிய பாம்பு....

7.67 மீட்டர் சீளத்ஹ்டில் உள்ள இந்தப்பாம்பு தான் உலகிலேயே மிகப் பெரிய பாம்பாக கின்னஸில் இடம் பெற இருக்கிறது.

வேகம்...

வேகம்...

மிகக் குறைந்த நேரத்தில் படு வேகமாக ஜிப் வைக்கப் பட்ட சூட்கேஷுக்குள் நுழைந்த மனிதர் என்ற சாதனையை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த லெஸ்லி டிப்டன் என்ற மனிதர். இதற்காக இவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 5.43 விநாடிகள் மட்டுமே.

முகத்தில் ஊசிகள்...

முகத்தில் ஊசிகள்...

முகத்தில் அதிக ஊசிகள் குத்திக் கொண்டு சாதனை புரிந்துள்ளார் வீ சென்ஞ்சு என்ற சீன மனிதர். இவரது முகத்தில் உள்ள ஊசிகளின் எண்ணிக்கை சரியாக 2,009 ஆகும்.

English summary
A back-bending contortionist, a tightrope-walking dog and the lowest-ever limbo skater are among the wacky new entries in the latest Guinness World Records book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X