For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'லைட்' போட்டுகிட்டே தூங்குறீங்களா? அப்போ சீக்கிரமே நீங்க குண்டு பூசணிக்காய்தான்!

Google Oneindia Tamil News

லண்டன்: தூங்கும் அறையில் விளக்குகள் எரிவது, டி.வி. பார்த்துக்கொண்டே தூங்கி போவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Watch TV or use your mobile in bed? It could be making you FAT

அந்த ஆய்வின் படி நல்ல இருட்டான அறையில் தூங்காமல், செயற்கை ஒளி இருக்கும் அறையில் தூங்குவது, டி.வி. பார்த்துக்கொண்டே தூங்கி போவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றால் உடலின் இயல்பான செயல்பாடு மற்றும் கலோரிகளை எரிக்கும் பழுப்பு கொழுப்பு செல்களின் செயல்பாடுகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் சராசரியாக வாரத்தில் 20 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாகவும், இதுவே 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 27 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
People who take comfort in the glow of a telly, mobile phone or lamp while in bed are in for some bad news – it could be making you fat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X