For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டேடியத்தில் உட்கார்ந்து முழு தர்பூசணியை அப்படியே சாப்பிடும் 10 வயது பையன்..!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிக் பாஷ் டி20 லீக் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான மெல்போர்ன் ஸ்டார்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர்.

இந்தப் போட்டி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் ஒரு சிறுவன் தர்பூசணி சாப்பிடுவதும் பதிவானது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். தொலைக்காட்சி வர்ணனையாளர்களும், அந்த சிறுவனை, தர்பூசணி சிறுவன் என்று அழைத்தனர்.

அப்டியே சாப்பிட்ட சிறுவன்...

அப்டியே சாப்பிட்ட சிறுவன்...

தர்பூசணி சாப்பிடுவதில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா? அச்சிறுவன் தர்பூசணியை தோலோடு சேர்த்து அப்படியே சாப்பிட்டது தான் ரசிகர்களின் ஷாக்கிற்குக் காரணம்.

தோலுடன்...

தோலுடன்...

சம்பந்தப்பட்ட அச்சிறுவனின் பெயர் மிட்செல் சிபெக்கி. 10 வயதாகும் அச்சிறுவன் தர்பூசணியை தோலுடன் சாப்பிடுவது தான் வழக்கமாம். கையில் கொய்யாப்பழம் வைத்து சாப்பிடுவது போல், படுகேஷூவலாக தர்பூசணியைக் கடித்துச் சாப்பிடுகிறான் மிட்செல்.

வைரல்...

வைரல்...

இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதற்கென டுவிட்டரில் #watermelonboy என ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர்.

புதிய ஹீரோ...

புதிய ஹீரோ...

இந்த வீடியோவிற்கு கமெண்ட் அளித்துள்ள ஒருவர் ‘‘கிரிக்கெட்டின் புதிய ஹீரோ. அற்புதமாக வேலை செய்து முழு தர்பூசணியையும் ஏப்பம் விட்டுள்ளார். சிறப்பான விளையாட்டு'' எனப் பதிவு செய்துள்ளார்.

தர்பூசணிக்கு நான் அடிமை...

தர்பூசணிக்கு நான் அடிமை...

இந்த சம்பவம் குறித்து மிட்செல் கூறுகையில், "எனது 2 வயதில் இருந்தே தர்பூசணி சாப்பிட்டு வருகிறேன். அதன் ருசிக்கு என் நாக்கு அடிமையாகிவிட்டது. நான் மற்றவர்களைப் போல் ஒரு சராசரியான குழந்தை தான்" எனத் தெரிவித்துள்ளான்.

முதல் வைரல் வீடியோ...

இந்த வீடியோவானது இந்தாண்டின் முதல் வைரல் வீடியோ என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இணையத்தின் புதிய ஹீரோவாக உருமாறியுள்ளான் மிட்செல்.

கண்ணுபடப் போகுதய்யா "வெள்ளை" கவுண்டரே.. உனக்கு சுத்திப் போட வேணுமய்யா சின்ன கவுண்டரே!

English summary
A 10-year-old Australian boy who ate a whole watermelon, including its skin, at a cricket game in Melbourne has achieved cult status after his stunt was rated as the 'First Viral Hit of 2016'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X