For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுரேனியத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.. ஜாக்கிரதை.. அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுடன் சண்டை நடந்து வரும் நிலையில் ஈரான் அதிக அளவில் யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது, யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? | Iran's earthquake happened maybe because of Atom Bomb test

    டெஹ்ரான்: அமெரிக்காவுடன் சண்டை நடந்து வரும் நிலையில் ஈரான் அதிக அளவில் யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது, யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளது. இதனால் அணு ஆயுத போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இரண்டு வாரம் முன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது . இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

     மாறுகிறது ரஷ்ய அரசியலமைப்பு.. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா மாறுகிறது ரஷ்ய அரசியலமைப்பு.. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஈரான் - அமெரிக்கா இடையில் நிலவும் இந்த சண்டைக்கு அணு ஆயுத ஒப்பந்தமும் காரணம் ஆகும். அமெரிக்காவுடன் ஈரான் 2015ல் அணு ஆயுத ஒப்பந்தம் செய்தது. அப்போது, ஈரான் அணு ஆயுதங்களை செய்ய கூடாது, சோதனை செய்ய கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற சில நாடுகளுடனும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் 2018ல் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மதிக்கவில்லை. அந்த நாட்டிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. மறைமுகமாக அணு ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்து வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியாது. இதனால் அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது.

    ஈரான் தடை

    ஈரான் தடை

    அதோடு ஈரான் மீது தொடர்ச்சியாக மூன்று பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் நிலவும் சண்டை காரணமாக ஈரான் மீண்டும் யுரேனியம் ஆராய்ச்சியில் குதித்துள்ளது. முன்பை விட இப்போது மீண்டும் யுரேனியத்தை அதிகமாக செறிவூட்டி ஆராய்ச்சி செய்து வருகிறோம். 2015ல் செய்ததை விட அதிகமாக ஆராய்ச்சி செய்கிறோம்.

    அதிகமாக நடக்கிறது

    அதிகமாக நடக்கிறது

    இதை இன்னும் அதிகப்படுத்துவோம். அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுரேனியம் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதை எப்படி பயன்படுத்துவோம் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் எங்கள் பணிகள் தொடரும்.

    அச்சம்

    அச்சம்

    எங்களுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கிறது. ஆனாலும் நாங்கள் இதை நிறுத்த போவது கிடையாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். யுரேனியம் மூலம்தான் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படும். அதனால்தான் ஈரானின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    We are enriching more uranium than before the nuclear deal says Iran which leaves The USA in shocking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X