For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்களும் தயார்தான்.. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி.. ஆசியாவில் எகிறும் அணு ஆயுத போர் அச்சம்!

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் எந்த விதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயார் என்று பாகிஸ்தான் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் எந்த விதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயார் என்று பாகிஸ்தான் தெரிவித்து இருக்கிறது.

இரண்டு வாரம் முன் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டு போட்டது.

இதனால் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதேபோல் காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு பாகிஸ்தான் கொண்டு சென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி!ஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி!

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த நிலையில் தற்போது அதிரடி திருப்பமாக இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்றுள்ளார்.

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஷா குரேஷி இதுகுறித்து அளித்த பேட்டியில், இந்தியா பாகிஸ்தான் இடையே தற்போது மிகவும் மோசமான உறவு நீடித்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் இந்திய தலைவர்கள் பொறுப்பாக பேட்டி அளிக்க வேண்டும். ஆனால் இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்படி பேசவில்லை.

அணு ஆயுதம் ஏன்

அணு ஆயுதம் ஏன்

அவர் அணு ஆயுதம் குறித்து பேசியது தவறானது. அவரின் கருத்து பொறுப்பேற்றது. இது இரண்டு நாட்டிற்கு இடையிலான உறவை மேலும் கெடுக்க போகிறது. இந்தியா தொடர்ந்து காஷ்மீர் விஷயத்தில் பொறுப்பற்று செயல்பட்டு வருகிறது.

நாங்கள் இல்லை

நாங்கள் இல்லை

இந்தியா போல நாங்கள் செயல்பட போவதில்லை. காஷ்மீர் விஷயத்தில் நாங்கள் நேர்மையுடன் இருக்க போகிறோம். ஆனால் இந்தியா காஷ்மீரில் தொடர்ந்து அத்து மீறினால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இந்தியாவின் அனைத்து விதமான தாக்குதலையும் முறியடித்து திருப்பி தாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். இரண்டு நாட்டு உறவில் இது மேலும் பிளவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் காஷ்மீர் எல்லையில் இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
We are ready to retaliate says Pakistani Military after India's warning on 'No First Use' on Nuke.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X