For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறார் இளவரசர் ஹாரி.. திடீர் முடிவு.. சூப்பர் காரணம்!

பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டின் அரச குடும்பம் அந்நாட்டில் மிகவும் அதிகாரம் படைத்த குடும்பம் ஆகும். அதேபோல் ஐரோப்பிய யூனியனில் அக்குடும்பம் மிகவும் அதிகாரம் கொண்ட குடும்பம் ஆகும். முக்கியமான முடிவுகளை அரசுடன் சேர்ந்து இவர்களும் எடுப்பது வழக்கம்.

ஆனால் அந்நாட்டு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் பெரிய அளவில் அதிகாரம் மீது பற்று இல்லாமல் இருக்கிறார்கள். பெரிய அளவில் அரசு செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

எல்லோரும் கைவிரித்தார்கள்.. ஈரானை தாக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. பரபர காரணம்! எல்லோரும் கைவிரித்தார்கள்.. ஈரானை தாக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. பரபர காரணம்!

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வட அமெரிக்கா சென்று அங்கு வாழ முடிவு செய்துள்ளனர். லண்டனில் கொஞ்ச நாட்கள் மட்டும் இருக்க போகிறார்கள்.

அட எப்படி

அட எப்படி

அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

உதவி

உதவி

பிரிட்டன் அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம். ஆனால் அரசுடன் நெருக்கம் காட்ட மாட்டோம். பல நாட்களாக இதை யோசித்தோம். நிறைய விவாதித்து இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம். எங்கள் மனசு ஆட்சி செய்வதில் விருப்பம் கொள்ளவில்லை.

மக்கள்

மக்கள்

கொஞ்சம் மக்களுக்காக நேரடியாக பணியாற்றும் எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது. புது வருடத்தில் மிக முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறோம், என்று ஹாரி குறிப்பிட்டுள்ளார். அவர்களின் இந்த முடிவு பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

English summary
We don't be in the senior list of king family decides Prince Harry and Meghan in Britain today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X