For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து உறவுகளை, ஒப்பந்தங்களை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வார்த்தை தவறிய சீனா... ஹாங்காங்கில் எழுந்த போராட்டம்

    சீனாவில் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமை கொண்ட மாகாணமாக ஹாங்காங் இருக்கிறது. ஆனால் இதன் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க சீனா முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக அங்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம் ஹாங்காங் உள்ளே சீனா எப்போது வேண்டுமானாலும் தங்கள் படைகளை அனுப்ப முடியும். பாதுகாப்பை காரணம் காட்டி சீனா படைகளை அனுப்ப முடியும். இது ஹாங்காங்கின் சுயாட்சியை மொத்தமாக பறிக்கும் செயல் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

    அமெரிக்காவில் அமெரிக்காவில் "சில" சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை.. நிறுவனங்களுக்கு செக்.. அதிபர் டிரம்ப் அதிரடி!

    அமெரிக்கா கோபம்

    அமெரிக்கா கோபம்

    இந்த நிலையில் சீனாவின் இந்த செயலை கண்டித்து தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சீனாவில் இருக்கும் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு அந்தஸ்து உறவுகளை, ஒப்பந்தங்களை நீக்குவதாக முடிவு செய்து இருக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹாங்காங் மீது சீன தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. அதன் சுதந்திரத்தை பறித்துள்ளது.

    சீனா மோசம்

    சீனா மோசம்

    ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரத்தை சீனா நீக்கி இருக்கிறது. ஒரு நாடு, இரண்டு சட்டம் என்று ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை சீனா நீக்கி இருக்கிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்று சீனா செயல்படுகிறது. ஹாங்காங்கிற்கு சீனா கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளது. இது ஒரு மோசமான விஷயம். ஹாங்காங்கில் ஏற்பட்ட சோகமயமான விஷயம் இது.

    இதுதான் சரியான முடிவு

    இதுதான் சரியான முடிவு

    இப்போது சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது. இதனால் ஹாங்காங்கிற்கு நாங்கள் வழங்கிய சிறப்பு அந்தஸ்து, உறவுகளை மொத்தமாக நீக்குகிறோம். பொருளாதார மற்றும் பயண ரீதியான ஒப்பந்தங்களை, சிறப்பு தளர்வுகளை நீக்குகிறோம். இதனால் நாங்கள் செய்த பல ஒப்பந்தங்கள் பாதிக்கும். ஆனால் இதுதான் தற்போது சரியான நடவடிக்கை .

    கடுமையான செயல்

    கடுமையான செயல்

    ஹாங்காங் உடன் செய்யப்பட ஏற்றுமதி ஒப்பந்தம் , ஹாங்காங் உடன் உள்ள உறவு, தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் தொடங்கி பல ஒப்பந்தங்கள் நீக்கப்படுகிறது. இன்னும் பல ஒப்பந்தங்களை நீக்க தயாராக இருக்கிறோம். எங்கள் முடிவுகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் நாங்கள் எடுக்கும் முடிவுகள் நேர்மையானது. அவசியம் ஆனது என்பது மக்களுக்கு தெரியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    We end the preferential US treatment for the Hong Kong city in trade and travel says Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X