For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏவுகணை தாக்குதல்கள்.... அமெரிக்காவின் முகத்தில் அறைந்திருக்கிறோம்.... அயதுல்லா கொமேனி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்

    டெஹ்ரான்: அமெரிக்கா ராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அந்நாட்டின் முகத்தில் அறைந்திருக்கிறோம் என ஈரான் உயர் மத தலைவரான அயதுல்லா கொமேனி கூறியுள்ளார்.

    ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமானப் படை முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் 80 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

    We have slapped American on Faces, Iran leader Ayatollah Khamenei

    இத்தாக்குதல் தொடர்பான ஈரானின் உயர் மத தலைவர் அயதுல்லா கொமேனி கூறியுள்ளதாவது:

    ஈரான் அமைதியை விரும்புகிற நாடு. எந்த ஒரு தேசத்துடனும் மோதல் போக்கை கடைபிடிக்க ஈரான் விரும்பவில்லை

    ராணுவ ஜெனரல் சுலைமானி படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல்கள் தொடரும். தற்போது ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் முகத்தில் நாங்கள் அறைந்திருக்கிறோம்.

    இத்தகைய தாக்குதல்கள் போதுமானவை அல்ல. ஊழல் மலிந்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும். அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிலடியாக தருவோம்.

    இவ்வாறு கொமேனி கூறியுள்ளார்.

    English summary
    Iran supreme leader Ayatollah Khamenei called that the Missiles strikes a slap in the face for the US..
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X