For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் கொஞ்ச நாளில் குடிக்க காபியே கிடைக்காதாம்.. ஏன்.. காரணம் இதுதானாம்

இன்னும் கொஞ்ச நாளில் காலையில் குடிக்க காபியே கிடைக்காது என்கிறது ஒரு ரிபோர்ட். இது கொஞ்சம் காபி பிரியர்களுக்கு கடும்பேற்றும் செய்திதான். என்றாலும் முக்கியமானது.

Google Oneindia Tamil News

ரான்ட்பார்க்: காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் காபி குடிப்போர் அதிகம் உண்டு. பலரால் காபி குடிக்காமல் அன்றைய நாளே நகராது.

இப்படி உலகம் முழுவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஒரு பகுதியாய் காபி குடிகொண்டிருக்கிறது.

அந்த காபி உற்பத்தி குறித்து ஓர் ஆய்வு அண்மையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 'காபி ரிபோர்ட்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காபி பிறந்த இடம்

காபி பிறந்த இடம்

நாம் சுவைத்துக் குடிக்கும் காபியின் பிறப்பிடம் எத்தியோப்பியா. உலகம் முழுவதும் அதிக அளவில் காபியை ஏற்றுமதி செய்யும் நாடும் அதுதான்.

காபி காணாமல் போகும்

காபி காணாமல் போகும்

எத்தியோப்பியாவில் காபி பயிரிடப்படும் நிலப்பரப்பில் 60 சதவீதம் எதிர்காலத்தில் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம்தான் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

புவி வெப்பமடைந்து..

புவி வெப்பமடைந்து..

புவி வெப்பமடைவது உலக அழிவிற்கே காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அந்த புவி வெப்பமாதல்தான் காபி உற்பத்திக்கும் ஆப்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளைச்சல் குறையும்

விளைச்சல் குறையும்

இதுகுறித்து, காபி ரிபோர்ட் பத்திரிகையின் துணை ஆசிரியரும் கிவ்பூங்கா ஆய்வாளருமான ஆரோன் டேவிஸ், பூவி வெப்பமடைவதை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காபிக்கொட்டை விளைச்சல் வெகுவாக குறையும்.

சுவை கெடும்

சுவை கெடும்

மேலும், காபியின் சுவையும் கெடும். அதன் தொடர்ச்சியாய் காபி விலையும் பலமடங்கு அதிகரிக்கும். புவி வெப்பமடைந்து வருவதால் ஏற்கனவே காபி கொட்டை சாகுபடி கடுமையாக பாதிக்க தொடங்கிவிட்டது என்று ஆரோன் டேவிஸ் கூறியுள்ளார்.

English summary
Coffee production will be reduced due to global warming said Dr Aaron Davis, coffee researcher at Kew and coffee report’s author.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X