For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்!

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    India may fight with Malaysia and Turkey for supporting Pakistan

    கோலாலம்பூர்: காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனையால் தற்போது இந்தியா - மலேசியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதிக்கப்பட்ட போது, சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியது.

    பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக இந்த நாடுகள் கருத்து தெரிவித்தது. இதனால் தற்போது இந்தியா மலேசியா இடையே சண்டை மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா...? ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்இந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா...? ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்

    ஐநா மாநாடு

    ஐநா மாநாடு

    கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா மாநாட்டில் மகதீர் முகமது பேசியதாவது, ஐநா ஒப்பந்தத்தை இந்தியா மீறி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லை மீறி நுழைந்து, ஆக்கிரமித்துள்ளது. அவர்களின் இந்த செயலுக்கு கண்டிப்பாக காரணம் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் செய்தது தவறுதான் என்று, இந்தியாவிற்கு எதிராக மலேசிய பிரதமர் பேசி இருந்தார்.

    கவலை

    கவலை

    இதையடுத்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதற்கு பதில் அளித்தார். அதில், ஐநாவில் மலேசிய பிரதமர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் பேச்சு உண்மைக்கு மாறானது. அவரின் பேச்சு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மலேசியா ஏன் இப்படி

    மலேசியா ஏன் இப்படி

    இந்த நிலையில் இந்தியா மலேசியாவிற்கு எதிராக ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுக்க போகிறது என்று செய்திகள் வந்தது. அதன் ஒரு கட்டமாக இந்தியா மலேசியாவிடம் இருந்து தாவர எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது என்று தகவல் வந்தது. மலேசிய பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    துருக்கி நாடு

    துருக்கி நாடு

    அதுமட்டுமின்றி ஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி நாட்டின் மேல் இந்தியா கோபத்தில் இருக்கிறது. இதற்காக ஏற்கனவே துருக்கி நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுடன் இந்தியா உறவை முறித்துக் கொண்டுள்ளது. தற்போது மலேசியா உடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

    விளக்கம் அளித்தார்

    விளக்கம் அளித்தார்

    இந்த நிலையில்தான், மலேசிய பிரதமர் மகதீர் முகமது இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ஐநாவின் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது. அதை வெளிப்படையாக நான் கூறினேன். அதில் நான் உறுதியாக உள்ளேன்.

    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    இதுபோன்ற தவறை எந்த நாடு செய்தாலும் மலேசியா எதிர்த்து கேள்வி கேட்கும். அது இந்தியாவோ, பாகிஸ்தானோ, அமெரிக்காவே இது போன்ற தவறுகளை செய்தால் மலேசியா கேள்வி கேட்கும் என்று மகதீர் முகமது தெரிவித்துள்ளார்.

    English summary
    We stick to our stand against India says Malaysian Prime Minister on Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X