For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிதான் முக்கியம்.. மாற்றத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் பேச்சு.. நாடாளுமன்றத்தில் சிறப்பான உரை!

பாகிஸ்தானுக்கு போர் முக்கியம் இல்லை, அமைதிதான் முக்கியம் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்.. பாக் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு-வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு போர் முக்கியம் இல்லை, அமைதிதான் முக்கியம், ஆனால் நாங்கள் கோழை கிடையாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார்.

    பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்து இருக்கிறது. நாளையே இவர் விடுதலை செய்யப்பட உள்ளார்.

    இந்த அறிவிப்பை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாக். பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார். இதில் இம்ரான் கான் பல முக்கிய விஷயங்களை தெரிவித்தார். அந்நாட்டு வரலாற்றில் இம்ரான் கான் பேச்சு மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும்.

    [Read more: தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு]

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இம்ரான் கான் தனது பேச்சில், இந்த அவையில் என் அழைப்பை ஏற்று வருகை புரிந்த எல்லோருக்கும் நன்றி. இந்தியாவின் கோபத்திலும், தாக்குதலிலும் கூட பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்தது. போரிலும் சண்டையிலும் செலவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கே செலவு செய்ய எனக்கு விருப்பம்.

    நன்றி

    நன்றி

    பாகிஸ்தானில் மிக ஒழுக்கமாக செயல்பட்ட ஊடகங்களுக்கு நன்றி. புல்வாமா தாக்குதல் போன்ற மோசமான தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா?. அந்த முட்டாள்தனத்தை எப்படி பாகிஸ்தான் செய்தது என்று இந்தியா கூறுகிறது. எப்படி எங்கள் மீது இதில் பழி போடுகிறார்கள்.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முன்பே ஆதாரங்களை அளித்து இருக்கலாம். முன்பே அப்படி செய்திருந்தால் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன்பே இந்தியா ஆதாரங்களை அளித்து இருந்தால் விசாரித்து இருப்போம்.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முன்பே ஆதாரங்களை அளித்து இருக்கலாம். முன்பே அப்படி செய்திருந்தால் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன்பே இந்தியா ஆதாரங்களை அளித்து இருந்தால் விசாரித்து இருப்போம்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    நான் நேற்று பிரதமர் மோடியிடம் பேச முயற்சி செய்தேன். மெசேஜ் கூட அவருக்கு செய்திருந்தேன். இந்தியா - பாக் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அவரிடம் பேச முயன்றேன். இன்று துருக்கி தலைவர்களுடன் இந்த பிரச்சனை குறித்து பேசுவேன்.

    அமைதிதான் முக்கியம்

    அமைதிதான் முக்கியம்

    பாகிஸ்தானுக்கு எப்போதும் அமைதிதான் முக்கியம். பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைக்க கூடாது. நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுதான் நல்லது.

    நிறைய நண்பர்கள்

    நிறைய நண்பர்கள்

    எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன். இந்தியாவின் அரசின் செயல்கள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும். இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் புரிந்துகொள்வார்கள்.

    தமிழ் புலிகள்

    தமிழ் புலிகள்

    தற்கொலை படைத் தாக்குதல்கள் மதம் காரணமாக நடப்பது கிடையாது. 9/11 தாக்குதலுக்கு முன்பு வரை அதிக தற்கொலை படை தாக்குதலை நடத்தியது தமிழ் விடுதலை புலிகள்தான்.அவர்கள் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் மதத்தால் இந்த தாக்குதலை நடத்தவில்லை, அவர்களுக்கு இருந்தது வேறு விதமான கோபம்.

    விடுதலை செய்கிறோம்

    விடுதலை செய்கிறோம்

    நாங்கள் மக்களின் நன்மை கருதியும், அமைதி கருதியும் பாகிஸ்தானில் உள்ள அபிநந்தனை விடுதலை செய்கிறோம். நாளை அவர் விடுதலை செய்யப்படுவார், என்று இம்ரான் கான் பேசி இருக்கிறார். அவையில் அவர் இதை கூறியது பெரிய கரகோஷம் எழுந்தது.

    [Read more: அமைதிதான் முக்கியம்.. மாற்றத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் பேச்சு.. நாடாளுமன்றத்தில் சிறப்பான உரை!]

    English summary
    We want peace, Not war says PM Imran Khan in Pakistan Parliament on India's attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X