For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா ஆதாரங்களை அளித்தால் புல்வாமாவில் உதவுவோம்.. இறங்கி வரும் இம்ரான் கான்.. பரபர பேட்டி!

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்களை இந்தியா அளித்தால் விசாரணையில் உதவ தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    புல்வாமாவில் உதவுவோம், இறங்கி வரும் இம்ரான் கான்! பரபர பேட்டி!- வீடியோ

    இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்களை இந்தியா அளித்தால் விசாரணையில் உதவ தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த சம்பவம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் போர் வந்தால் அதை சந்திக்க தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்ற வாரம் குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன கூறினார்

    என்ன கூறினார்

    நேற்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா நிறைய மாறிவிட்டது. இது பழைய இந்தியா கிடையாது. தீவிரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டும் யாரையும் நாம் விட கூடாது. மொத்தமாக தீவிரவாதிகளையும், அவர்களின் நண்பர்களையும் இந்தியா அழிக்கும்.

    செய்யவில்லை

    செய்யவில்லை

    நானும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துக் கொண்ட போது, அவர் வறுமைக்கு எதிராக போராட போவதாக கூறினார். நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை காக்கவிலை, என்று மோடி கூறினார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நான் சொன்ன வார்த்தைகளை காக்க கூடியவன். அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதே முக்கியம். இந்தியா புல்வாமா தாக்குதல் குறித்து சரியான உளவு தகவல்களை அளித்தால், நாங்கள் கண்டிப்பாக உதவி செய்வோம்.

    இந்தியாவின் கையில்

    இந்தியாவின் கையில்

    எங்களுக்கு அமைதிதான் முக்கியம். இந்தியாவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தீவிரவாத தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா வழங்கினால், நாங்கள் உதவுவோம் என்று இம்ரான் கான் கூறி இருக்கிறார். இதனால் இருநாட்டு பிரதமர்கள் இடையே தற்போது வார்த்தை போர் உருவாகி உள்ளது என்றே கூற வேண்டும்.

    English summary
    We will help India if they give evidence of attack says Imran Khan after Pulwama Attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X