For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களில் யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்.. அமெரிக்காவுடன் மோதல்!

கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்களுக்கு இல்லையேல் யாராலும் முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்- வீடியோ

    பாக்தாத்: கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஈரான் மீது முழுக்க முழுக்க 100% பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    அதன் ஒரு கட்டமாக தற்போது ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதான் தற்போது ஈரானை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி!லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி!

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்துள்ளது. ஈரானிடம் இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த எண்ணெய்யை இந்தியா இனி நிறுத்த போகிறது.

    மற்ற நாடுகள்

    மற்ற நாடுகள்

    அதேபோல் சீனா, துருக்கி ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் உத்தரவிற்கு கட்டுப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் ஈரான் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இது எண்ணெய் வள நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    ஹோர்முஸ் ஜலசந்தி எப்படி

    ஹோர்முஸ் ஜலசந்தி எப்படி

    ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இதை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனாலும் இதில் எப்போதும் ஈரானின் கையே ஓங்கி இருக்கும். இந்த ஒரே வழி மூலம் தான் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 90 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.

    கடும் எச்சரிக்கை

    கடும் எச்சரிக்கை

    இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தி மூட போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தங்களை மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்களை சீண்ட வேண்டாம் என்று ஈரான்எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.

    English summary
    We will shut down Hormuz Strait to all oil importing countries warns Iran after USA's Ban order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X