For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி?

அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனையில் எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என்று ஈராக் நாடு தெரிவித்திருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவிற்கு எதிராக ஈரானுடன் கரம் கோர்க்கும் ஈராக்

    டெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனையில் எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என்று ஈராக் நாடு தெரிவித்திருக்கிறது.

    அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனை தற்போது புகைந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இது கொழுந்து விட்டு எறியவும் வாய்ப்புள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடந்த வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது.

    We will stand with Iran always says Iraq opposing USA

    சென்ற மாதம் மூன்றாவது பொருளாதார தடையையும் விதித்தது. இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடுமையான கோபத்தில் உள்ளது. ஈரானை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் தனது படைகளை குவித்து வருகிறது. சவுதிக்கு அமெரிக்கா போன வாரம் தனது படைகளை அனுப்பியது.

    ஈரான் அமெரிக்காவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டது. இதனால் ஈரான் எண்ணெய்களை வாங்க அமெரிக்கா உலக நாடுகளுக்கு தடை விதித்து. இதுதான் தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஈரானுக்கு 1,20,000 துருப்புகளை அனுப்ப போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி அல் ஹக்கீம் நேற்று ஈரான் நாட்டு அதிகாரிகளை சந்தித்தார்.

    இவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனையில் எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என்று ஈராக் நாடு தெரிவித்திருக்கிறது. என்னதான் இருந்தாலும் ஈரான் எங்கள் சகோதர நாடு.

    ஈரான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்வோம். நாங்கள் அமெரிக்காவுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்துவோம். ஆனால் நாங்கள் எப்போதும் ஈரானின் பக்கமே நிற்போம். இந்த பிரச்னையை எப்படியாவது நாங்கள் பேசி தீர்க்க முயல்வோம் என்று ஈராக் நாடு குறிப்பிட்டுள்ளது.

    English summary
    We will stand with Iran and support them always says Iraq opposing USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X