For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஜெனீவா: மருத்துவப் பணியாளர்களும், கோவிட் 19 நோயாளிகளும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று முன்பு கூறியிருந்த உலக சுகாதார நிறுவனம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளது.

Recommended Video

    WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus

    இதன் மூலம் வெளியில் போக முடிவு செய்வோர், முகக்கவசத்துடன் செல்வது நல்லது என்பதையும் ஹூ மறைமுகமாக உணர்த்தியுள்ளது. கொரோனாவைரஸ் தொடர்பாக அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை ஹூ அறிவித்து வருகிறது.

    தற்போது மாஸ்க் அணிவது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை அது வெளியிட்டுள்ளது. அதன்படி, வைரஸ் பரவும் பகுதிகளில் இருப்போர், வெளியில் வரும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிவது அவசியம். துணி மாஸ்க்கை அவர்கள் அணியலாம்.

     எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்! எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்!

    மாஸ்க் அவசியம்

    மாஸ்க் அவசியம்

    குறிப்பாக கடைகளுக்குப் போகும்போது, பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக ஹூ இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ், அதநாம் கெப்ரியேசஸ் கூறுகையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் மாஸ்க் அவசியம் அணிய வேண்டும்.

    கைகளை சுத்தமாக வச்சுக்கோங்க

    கைகளை சுத்தமாக வச்சுக்கோங்க

    அதேசமயம், மாஸ்க் மட்டுமே நம்மைக் காக்காது. கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி அவசியம். தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் பணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள் அந்த இடத்தில் இருக்கும்வரை எப்போதும் மாஸ்க் அணிந்தபடி இருப்பது அவசியம்.

    டாக்டர்களுக்கு அறிவுரை

    டாக்டர்களுக்கு அறிவுரை

    அதேபோல இதய நோயாளிகள் பிரிவு மற்றும் பிற வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், மெடிக்கல் மாஸ்க்கை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். வார்டுகளில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாவிட்டாலும் கூட மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். ஆரம்பத்தில் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டாம் என்று சொல்லி வந்தது ஹூ.

    பரவல் மோசம்

    பரவல் மோசம்

    தற்போது அதில் மாற்றம் செய்து இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் கொரோனா பரவல் மேலும் மோசமாகி வருவதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இந்தியாவில் இன்னும் பீக் வரவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே மரணங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. பாதிப்புகளும் கிடுகிடுவென அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Who has advised to Wear mask if you go to shops and travels in buses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X