For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும்! விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் - அமெரிக்கா என்ன தான் பிரச்னை... இவர்களில் யார் பலசாலி ?

    தெக்ரான்: ஈரான் ஈராக்கை சாதாரண எடை போட முடியாது. ஏனெனில் படை பலத்தில், அணு ஆயுத பலத்தில் என எல்லாவற்றிலும் அமெரிக்கா மிகப்பெரிய அசுரனாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரமான கருப்பு தங்கம் கச்சா எண்ணெய் கிணறுகளை மொத்தமாக அழிக்கும் வல்லமை இரு நாடுகளுக்குமே உண்டு.

    ஏனெனில் அமெரிக்கா நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அளவுக்கு ஈரானுக்கு பலம் கிடையாது என்றாலும், இத்தனை ஆண்டுகளாக எந்த பெட்ரோலுக்காக பல நாடுகளுடன் அமெரிக்கா யுத்தம் செய்ததோ அதை இல்லாமலோ அல்லது பேரழிவையோ ஏற்படுத்திவிட முடியும்.

    இதற்கு மிகப்பெரிய ஆயுத பலம் ஈரானுக்கு தேவையில்லை. ஆனால் அப்படி செய்தால் ஈரானை அமெரிக்கா சும்மாவிடாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    அது நிலநடுக்கம் அல்ல.. அணு ஆயுத சோதனையால் உண்டான அதிர்வு.. ஈரான் மீது புகார் வைக்கும் வல்லுநர்கள்! அது நிலநடுக்கம் அல்ல.. அணு ஆயுத சோதனையால் உண்டான அதிர்வு.. ஈரான் மீது புகார் வைக்கும் வல்லுநர்கள்!

    ரஷ்யா வேடிக்கை பார்க்காது

    ரஷ்யா வேடிக்கை பார்க்காது

    ஜப்பானில் வீசியது போல் ஒரே குண்டில் ஈரானின் ஒட்டு மொத்த சோலியையும் முடிக்க அமெரிக்காவால் முடியும். அப்படி நடக்கும் வரை ரஷ்யா, சீனா, வடகொரியா வாயை மூடி வேடிக்கை பார்க்காது . அத்துடன் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும்.

    அழித்தது ரஷ்யாதான்

    அழித்தது ரஷ்யாதான்

    அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. விளைவு அவ்வளவு மோசமாக இருக்கும். இரண்டாம் உலகப்போருக்கு காரணம் ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசை. ஜப்பானின் நாடு பிடிக்கும் பேராசை தான். ஜப்பானை போட்டுத்தள்ளிய அமெரிக்கா பக்கத்தில் இருந்த ஜெர்மனியை எதுவும் செய்யவில்லை. ஜெர்மனியின் பலம் மிகப்பெரியதாக அப்போது இருந்து. உலகில் பல நாடுகளை வென்ற மகிழ்ச்சியில் ரஷ்யாவின் எடுத்த படை எடுப்புதான் அதற்கு அழிவை தேடி தந்தது. அதுவரை அமைதியாக இருந்து ரஷ்யா, ஆக்ரோசம் கொண்டு ஜெர்மனிய படைகளை அழித்தது.

    பிறகு சரியாகும்

    பிறகு சரியாகும்

    எனவே இப்போதைய நிலையில் பெரிய அளவிலான ஆயுதங்களை அமெரிக்கா வெளியே எடுத்த வீச வாய்ப்பு இல்லை. சுலைமாணியைகொன்றதால் சிறிது கால பதற்ற நிலைக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கும் என தெரிகிறது. ஆனால் ஈரானின் பதில் நடவடிக்கைகளை பொறுத்தே அதுவும் இருக்கும். இல்லாவிட்டால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடியாக போர் ஏற்படும்.

    உலகத்திற்கே பேராபத்து

    உலகத்திற்கே பேராபத்து

    போரால் தான் அழிந்து போனாலும் பரவாயில்லை என்று அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமான சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் கிணறுகளை ஈரான் அழித்தால், அதனால் உலகம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே எதுவுமே நடக்காமல் இருப்பதே அனைவருக்கும் நலம். அதாவது டிரம்ப் வார்த்தையில் சொல்வது என்றால் 'ஆல் இஸ் வெல்'.

    English summary
    what can make iran after war with usa in middle east . if iran demolished oil wells it will danger for world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X