For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது மாஸ்க்கா.. இதுக்கு அந்த பிளேக் நோயே பரவாயில்லை போலயே.. பீதியை கிளப்பிய அந்த காலத்து டாக்டர்கள்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எனும் தொற்றுநோய் பரவத் தொடங்கியதும் அது தங்களுக்கு பரவாமல் இருக்க பாதுகாப்பு கவசம் (PPE kits), மாஸ்க்குளை மருத்துவர்கள் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவிய போது மருத்துவர்கள் அணிந்திருந்த முகமூடியையும் டிரஸ்ஸையும் பார்த்தால் பயந்து விடுவீர்கள்.

Recommended Video

    Bubonic plague சீனாவில் அடுத்த தொற்றுநோய்? மக்களுக்கு எச்சரிக்கை

    சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சீனாவில் முதல் அலையிலிருந்து மீண்ட சீனா தற்போது இரண்டாம் அலையில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் இந்த நோயிலிருந்து மீள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக புபோனிக் பிளேக் என்ற நோய் பரவி வருகிறது.

    அணு ஆயுத போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா.. ஏவுகணையை அனுப்புவோம் சீனா வார்னிங்.. பரபர மோதல்! அணு ஆயுத போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா.. ஏவுகணையை அனுப்புவோம் சீனா வார்னிங்.. பரபர மோதல்!

    தொற்றுநோய்

    தொற்றுநோய்

    இது மிகவும் கொடூரமாக பரவக் கூடிய தொற்றுநோய் என கூறுகிறார்கள். சீனாவில் மங்கோலியாவுக்குட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியான நிலையில் தற்போது அந்த நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மர்மோட் எனப்படும் ஒரு வகை அணிலின் இறைச்சியை தின்றதால் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    மாஸ்க்

    மாஸ்க்

    கொரோனா பாதிப்பு தொற்றுநோய் என்பதால் அந்த நோய்க்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தும் மாஸ்க் அணிந்தும் வருகிறார்கள். அது போல் பொதுமக்களும் நோய் வராமல் தடுக்க மாஸ்க் அணிகிறார்கள். இதனால் தற்போது பிபிஇக்கும் மாஸ்க்கும் கிராக்கி ஜாஸ்தி.

    என் 95 மாஸ்க்

    என் 95 மாஸ்க்

    இது நவீன காலம், என் 95 மாஸ்க், பிபிஇ கிட், கிளவுஸ், காலணி உறை, முகம் மறைக்கும் அட்டை எல்லாம் சரி. ஆனால் அந்த காலத்தில் பிளேக் போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்ட போது இதுபோன்ற எந்த வசதியும் இல்லாமல் அது பரவாமல் காக்க அந்த காலத்து மருத்துவர்கள் எதை பயன்படுத்தியிருப்பார்கள் என்று கூகுளில் தேடினாலே கிடைக்கிறது. அதை பார்க்கும் போது அச்சமூட்டுகிறது.

    பலி எண்ணிக்கை அதிகம்

    பலி எண்ணிக்கை அதிகம்

    அதாவது தற்போது சீனாவில் பரவியுள்ள புபோனிக் பிளேக் கடந்த 1347ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பரவி மனித வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய "சாதனையை" பதிவு செய்துள்ளது. இதை பிளாக் டெத் நோய் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய்க்காக வடஆப்பிரிக்கா, யுரேஷியாவில் 75 முதல் 200 மில்லியன் பேர் பலியானார்கள்.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    அந்த புபோனிக் பிளேக் காலத்தில் மருத்துவர்கள் அணிந்த பாதுகாப்பு உடைகள் நீண்ட கயிறு மூலம் தலை முதல் பாதம் வரை கட்டப்பட்டிருக்கும். தலையில் வட்ட வடிவமான தொப்பி, முகத்தில் பறவை மூக்கு போன்ற முக கவசம், நீண்ட அங்கி, லெதர் கிளவுஸ், லெதர் பூட்ஸ், மூக்குக் கண்ணாடிகள், வாக்ஸால் ஆன நீண்ட அங்கிகள் ஆகியவற்றை அந்த காலத்து மருத்துவர்கள் பயன்படுத்தினர்.

    பிளேக் பரவாது

    பிளேக் பரவாது

    அது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கையில் நீண்ட குச்சியை வைத்திருந்தனர். இதனை நீட்டுவதன் மூலம் மக்களிடம் இருந்து தள்ளி இருந்தனர். கொக்கு மூக்கு போல் நீண்டு காணப்படும் மாஸ்க்குகளை அணிவதால் கெட்ட காற்று மூலம் பிளேக் பரவாது என மருத்துவர்கள் நம்பினர்.

    English summary
    Earlier Pandemic disease like Bubonic plague do you know what type of masks did the doctors wear?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X