For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீரில் தாம் ஆக்கிரமித்துள்ள அக்சய்சின் பகுதியை இந்தியா கைப்பற்றிவிடலாம் என்பதால் சீனா மிகவும் அச்சத்தில் இருக்கிறதாம்.

காஷ்மீரின் வடமேற்கு நிலப்பகுதி அக்சய் சின் என்ற பகுதியாகும். இது தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்தியாவால் உரிமை கோரப்படும் இந்த பகுதியை சீனா ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அக்சய்சின் நிலப்பகுதி மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம். மேய்ச்சல் நிலப்பகுதி என்பதால் இந்தியா-சீனா நாடோடிகள் நடமாட்டம் உள்ள பகுதி. இப்பகுதியை சீனா சிறிது சிறிதாக வளைத்துப் போட்டு ஆக்கிரமித்தது.

ஆடு நனையுதேனு ஓநாய் மட்டும் அழலை.. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் ஒப்பாரி! ஆடு நனையுதேனு ஓநாய் மட்டும் அழலை.. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் ஒப்பாரி!

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

1962-ஆம் ஆண்டு இந்தியா- சீனா யுத்தத்துக்குப் பின்னர் அக்சய் சின்னை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டது. இந்த தைரியத்தில்தான் அருணாசல பிரதேசத்தின் தவாங் பள்ளத்தாக்குக்கும் கூட சீனா உரிமை கோரி மிரட்டல் விடுத்தது.

 அக்சய் சின்

அக்சய் சின்

இந்த அக்சய்சின் பகுதியில்தான் சீனா தமது சிஞ்சியாங் மாகாணத்தையும் திபெத்தையும் இணைக்கும் சாலையை அமைத்துள்ளது. இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினையுள்ள பகுதிகளில் மிக முக்கிய பகுதி அக்சய் சின் ஆகும்.

 சீனா வாதம்

சீனா வாதம்

ஜம்மு காஷ்மீரில் மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்கனவே சீனா மதிப்பது இல்லை. இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகள் அனைத்தையும் மீட்போம்; இதற்காக உயிரையும் கொடுப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்தார்.

 அமித்ஷா மிரட்டலால் சீனா அச்சம்

அமித்ஷா மிரட்டலால் சீனா அச்சம்

அமித்ஷாவின் இந்த மிரட்டலைத் தொடர்ந்தே அக்சய்சின் குறித்து சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. இதனால் சர்வதேச அரங்கத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பி வர்ருகிறது.

English summary
What is Aksai Chin? How did China captured it? Here are the historical events.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X