For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை? மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்? இதுதான் நடந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    வர்த்தக ஒப்பந்ததில் இணைய மறுக்கும் இந்தியா.. மோடி முடிவு!

    பாங்காக்: உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு இன்று ஆர்சிஇபி என்ற பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    16 நாடுகள் இணைய இருக்கும் இந்த வர்த்தக ஒப்பந்த கூட்டம் தொடர்பான ஆலோசனையில் மோடியும் கலந்து கொண்டார். ஆலோசனையின் முடிவில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணைய முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஆர்சிஇபி குழுவில் இந்தியா இதுவரை சிறப்பாக செயல்ப்பட்டு இருக்கிறது. இதில் இருக்கும் நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக்காத்து இருக்கிறது. அனைத்து விவாதங்களிலும் கலந்து கொண்டு இருக்கிறது.

    ஆர்சிஇபி எப்படி

    ஆர்சிஇபி எப்படி

    கடந்த 7 வருடங்களில் இந்தியா ஆர்சிஇபி குழுவில் முக்கிய விஷயங்களை விவாதம் செய்துள்ளது. உலக வர்த்தக கொள்கைகள், வர்த்த ஒப்பந்தங்களை இதனால் இந்தியா மாற்றிக்கொண்டுள்ளது. இதை எல்லாம் யாரும் மறுக்க முடியாது. இதை யாராலும் மறக்கவும் முடியாது.

    தொடர் வேண்டாம்

    தொடர் வேண்டாம்

    ஆனால் இன்று ஆர்சிஇபி ஒப்பந்தம் இந்தியாவின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. ஆர்சிஇபியின் உண்மையான நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் ஆர்சிஇபி இல்லை. அதனால் ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது.

    பேசவில்லை

    பேசவில்லை

    ஆர்சிஇபி ஆலோசனையில் முக்கிய விஷயங்கள் பேசப்படவில்லை. இந்தியாவின் முக்கிய கோரிக்கைகளை பேசவில்லை, அதில் எங்களால் சமரசம் செய்ய முடியாது. ஆர்சிஇபி ஆலோசனையின் முடிவு சரியாகவோ, நடுநிலையாகவோ இல்லை.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    அதனால் இதில் நாங்கள் இணையவில்லை. இந்த முடிவுகள் எங்கள் நாட்டின் விவசாயிகள், பங்கு தாரர்கள், வியாபாரிகள், நிறுவனங்களை நேரடியாக பாதிக்கும். ஆகவே இதில் இந்தியா இணையாது. இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்.

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட வாங்கும் சக்தி கொண்ட நாடு. இந்த ஒப்பந்தம் எங்களை பாதிக்க வாய்ப்புள்ளது. எண்களின் கோரிக்கைகளை இந்த ஆலோசனையில் யாரும் ஏற்கவில்லை. அதனால் இந்த ஆர்சிஇபியில் இணையவில்லை என்று, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    What is the reason behind India's decision not to join RCEP? - Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X