For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோஷங்கள் முழங்க.. ஹீரோ போல கம் பேக் கொடுத்த கிம் ஜோங் உன்.. 21 நாட்கள் எங்கே போனார்.. என்ன செய்தார்?

21 நாட்கள் காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் என்ன செய்தார்? எங்கே போயிருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

பியாங்யாங்: 21 நாட்கள் காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் என்ன செய்தார்? எங்கே போயிருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Recommended Video

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... திரும்ப வருகிறார் கிம் | Kim Jong Un makes public appearance

    பெரும் பரபரப்பிற்கும், வதந்திகளுக்கும் இடையே கிம் ஜோங் உன் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று அதிகாலை வெளியானது. கடந்த மூன்று வாரமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் பரவியது.

    வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதுதான் அவரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு காரணம் ஆகும்.

    என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு?என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு?

    மோசமான உடல்நிலை

    மோசமான உடல்நிலை

    கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மிக மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் நாளான 11ம் தேதிதான் கிம் ஜோங் உன் மாயமானார். அதில் இருந்து தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

    மோசமான வதந்திகள்

    மோசமான வதந்திகள்

    அதன்படி கிம் ஜோங் உன் மூளை சாவு அடைந்துவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் பலியாகலாம் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் வந்து இருக்கிறார்.

    மீண்டும் வந்தார்

    மீண்டும் வந்தார்

    ஆம் இன்று அதிகாலை கிம் ஜோங் உன் மீண்டும் வந்தார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார். பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    கோஷங்கள் எழும்பியது

    கோஷங்கள் எழும்பியது

    கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காரில்தான் வந்தார். ஆனால் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவர் உள்ளே வரும் போதே அங்கு பெரிய அளவில் கோஷங்கள் எழுந்தது. மக்கள் ஆரவாரமாக கோஷங்களை எழுப்பினார்கள். அவரை வரவேற்க பெரிய அளவில் பலூன்கள் பறக்க விடப்பட்டு இருந்தது. ஹீரோ போல கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து இருந்தார்.

    மக்களுக்கு எல்லாம் தெரியும்

    மக்களுக்கு எல்லாம் தெரியும்

    கிம் ஜோங் உன் இப்படி மீண்டும் வருவார் என்று வடகொரியாவின் மக்கள் எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால் தென் கொரியா இதற்கு முன்பே அவர் நன்றாக இருக்கிறார் என்று அறிவித்து இருந்தது. அதேபோல் அந்நாட்டு மக்கள் இதனால் வெளிநாட்டு ஊடகங்கள் எதற்கும் பேட்டி கொடுக்கவில்லை. தென் கொரியாவில் இருக்கும் சொந்தங்களுக்கு கூட கிம் குறித்து, வடகொரியா மக்கள் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது இதனால்தான் என்கிறார்கள்.

    விமானத்தில் எங்கும் செல்லவில்லை

    விமானத்தில் எங்கும் செல்லவில்லை

    இதில் சில சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது. கிம் ஜோங் உன் இத்தனை நாட்கள் வொன்சான் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து ரயில் மூலமே பியாங்யாங் வந்துள்ளார். அவரின் விமானம் ஒரு மாதமாக பியாங் யாங் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இத்தனை நாட்களாக வொன்சான் பகுதியில் இருந்த கிம்மின் ரயில் இப்போது அங்கு இல்லை என்ற தகவலும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

    மூன்று விஷயங்கள் பரவுகிறது

    மூன்று விஷயங்கள் பரவுகிறது

    கிம் ஜோங் உன் 21 நாட்கள் என்ன செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த செய்தியாளர்கள் சிலர் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளனர். வடகொரியாவில் கடந்த 3 வாரம் கிம் ஜோங் என்ன செய்தார் என்று கூறியுள்ளனர். 3 முக்கியமான விஷயங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    கால் ஆபரேஷன்

    கால் ஆபரேஷன்

    அதன்படி கிம் ஜோங் உன் கால் ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு 2014ல் காலில் ஒரு எலும்பு நீக்கப்பட்டது. சிறிய எலும்பு பகுதி நீக்கப்பட்டது. அதில் தற்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்றார். இதனால் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார் என்று கூறுகிறார்கள். அவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள்.

    மோசமான உடல்நிலை

    மோசமான உடல்நிலை

    இன்னொரு பக்கம் சில தென் கொரியா செய்தியாளர்கள், உண்மையில் கிம் ஜோங் உன் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்ததது உண்மைதான். ஆனால் அவரின் உடல்நிலை மோசம் அடையவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் கிம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அவர் வேறு சில விஷயங்களை இந்த ஓய்வின் போது செய்து கொண்டு இருந்தார் என்கிறார்கள். அது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

    குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை

    குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை

    அதன்படி தனது தங்கை கிம் யோ ஜோங்கிற்கு ஆட்சி அதிகாரத்தை எதிர்காலத்தில் வழங்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். ராணுவ அதிகாரிகள் உடன் பேசினார் என்று கூறப்படுகிறது. வடகொரியா பொதுவாக பெண்களை தலைவராக ஏற்காது. வடகொரியா பெரிய அளவில் ஆணாதிக்க அரசியல் வரலாறு கொண்டது. கிம் யோ ஜோங் அங்கு அதிபர் ஆவது அத்தனை எளிதான காரியம் இல்லை.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இதனால் அங்கு தனது தங்கைக்கு போதிய பலம் சேர்க்கும் வகையில் கிம் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதனால்தான் கடந்த சில தினங்களாக கிம் யோ ஜோங் அந்நாட்டு அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தினார். கிம் ஜோங் அனுமதியோடுதான் இது நடந்தது. எதிர்காலத்தில் தனக்கு ஏதாவது ஏற்பட்டால் அரசியல் நிலையற்ற தன்மை வர கூடாது என்று கிம் இப்படி தயார் செய்கிறார் என்கிறார்கள்.

    2014ல் இதேதான் நடந்தது

    2014ல் இதேதான் நடந்தது

    இப்படி ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் இதற்கு முன்பும் கூட ஒருமுறை கிம் ஜோங் உன் காணாமல் போய் இருக்கிறார்.2014ல் சுமார் 6 வாரங்கள், செப்டம்பர் 3ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை இவர் எங்கே சென்றார் என்று அப்போது தெரியவில்லை.அப்போதும் இதேபோல் அவரின் மரணம் குறித்து வதந்திகள் பரவியது. அப்போதும் கூட இதேபோல் வடகொரியாவின் புதிய அதிபர் யார் என்று நிறைய செய்திகள் உலவ தொடங்கியது.ஆனால் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சரியாக 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கிம் ஜோங் உன் வெளியே வந்தார். ஆம் மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை செய்ய மீடியா முன் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    What Kim Jong Un was doing all these 21 days? Where was he?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X