For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரா முக்கியம்.. லைக்தான் முக்கியம்.. விமானத்தின் என்ஜின் நொறுங்கிய போதும் வீடியோ அப்லோடிய மக்கள்

அமெரிக்காவில் விமானம் ஒன்றின் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்து இருக்கிறது. இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அதுகுறித்து கவலைப்படாமல் இருந்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. விமானத்தின் ஒரு பக்க என்ஜின் மட்டும் கழன்று இருக்கிறது.

விமானத்தில் இருந்த 363 பயணிகள், 8 விமான பணியாளர்கள், 2 விமான ஓட்டிகள் ஆகியோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

என்ன தைரியம்

என்ன தைரியம்

விமானம் தடுமாறிய போதும் அவர்கள் வீடியோ பதிவேற்றி இருக்கிறார்கள். அவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் வைரல் ஆகியுள்ளது. அவர்களின் தைரியத்தையும் மக்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

எங்க இருக்கு

விமானத்தில் பிரச்சனை ஏற்படும் போது அதில் இருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவர் அதை வெளியிட்டு, என்ஜின் விழுந்தால் எப்படித் தப்பிக்க வேண்டும் என்று இங்குக் குறிப்பிடவில்லையே என்றுள்ளார்.

புகைப்படத்தை ஏற்றினார்

இவரும் விமானத்தில் இருக்கும் போது பயப்படாமல் போட்டோ எடுத்துள்ளார். பின் தரையிறங்கிய உடன் அதைப் பதிவேற்றி இருக்கிறார். என் வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான நாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கெத்து பாஸ்

இவர் செய்ததுதான் மிகவும் வித்தியாசமானது. இவர் மக்கள் எப்படிப் இருக்கிறார்கள் என்று வீடியோவே எடுத்துள்ளார். அதோடு மக்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் பாருங்கள் என்று குறிப்பிட்டு, கேமராவை பார்த்து கெத்தாக சிரித்துள்ளார்.

English summary
Plane's starboard engine ripped of inn midair in San Francisco. The 363 passengers, eight flight attendants and two pilots were safely landed in Hawaai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X